சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த பாரதி கண்ணம்மா நடிகர்...மணப்பெண் யார் தெரியுமா..?
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் அகிலனுக்கு சிம்பிளாக திருமண நடைபெற்று முடிந்துள்ளது.
பாரதி கண்ணம்மா அகிலன்
3 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடர் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்றது. கடந்த முடிவடைந்த இத்தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த தொடரில் நடித்து பலரும் ரசிகர்களிடம் நல்ல பிரபலமடைய படஙக்ளில் நடிக்க துவங்கினர்.
அந்த வரிசையில் தான், அத்தொடரில் அகிலன் என்ற பெயரிலேயே நடித்து வந்த அகிலன், பாதியிலேயே அந்த தொடரில் இருந்து விலகி சினிமாவில் நடித்து வந்தார்.
காதலியுடன் திருமணம்
விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வரும் அகிலன், தற்போது தனது காதலியான அக்ஷயா முரளிதரனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் இத்தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.