பிரச்சாரத்தில் உளறி கொட்டிய ஆர்.எஸ். பாரதி- கூட்டத்தில் பரபரப்பு

dmk stalin bharathi Kolathur
By Jon Mar 27, 2021 11:21 AM GMT
Report

பிரச்சார கூட்டத்தில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி முன்னுப்பின் பேசி நன்றாக உளறி கொட்டியதால், கூட்டத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியில் களம் இறங்கியிருக்கிறார். இதனையடுத்து, கொளத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி பேசுகையில், அவர் திமுகவில் வாரிசு அரசியல் என்ற விமர்சனத்துக்கு பதில் அளித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அதிமுகவை எம்ஜிஆருக்கு பின்னர் முதலமைச்சராக அவரது மனைவி ஜானகி பதவியேற்றார் என்றும் சுட்டிக்காட்டினார். பின்னர் எம்.ஜி.ஆருடன் 25 படங்களில் நடித்த நடிகை ஜெயலலிதாவும் அவருக்கு பின் சசிகலா தானே முதலமைச்சரானார் என்றும் பேசினார்.

பிரச்சாரத்தில் உளறி கொட்டிய ஆர்.எஸ். பாரதி- கூட்டத்தில் பரபரப்பு | Bharathi Excitement Crowd Kolathur

ஜெயலலிதாவுக்கு பிறகு ஓ.பி.எஸ் தான் முதலமைச்சரானார் என்பதை மறந்து சசிகலாவை சுட்டிக்காட்டினார் ஆர்.எஸ்.பாரதி. பிறகு, ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் வாரிசு இல்லை. அதனால் அவர்களது வாரிசுகள் பதவிக்கு வரவில்லை என்றும், எடப்பாடி முதலமைச்சரானது ஒரு விபத்து என்று பேசும்போது கூட்டத்தில் சற்று நேரம் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.