முதல்வர் எடப்பாடி தோல்வி பயத்தில் பொய் கூறி வருகிறார்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியிலே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அதிமுகவை தாக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகம் பயன்படுத்தும் விஷயங்களுள் ஜெயலலிதாவின் மரணமும் ஒன்று. அது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் செயல்படாமலே உள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக போட்ட வழக்கு தான் காரணம் என முதல்வர் எடப்பாடி தெரிவித்திருந்தார். இது திட்டமிட்ட பொய் என ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, ”ஜெயலலிதா மரணத்திற்கு திமுக போட்ட வழக்கு தான் காரணம் என்பது திட்டமிட்ட பொய் என கூறியுள்ளார்.
ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கில் திமுக மேல்முறையீடு செய்யவில்லை என்றும் ஜெயலலிதா மீதான வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு அப்போது பாமக கோரிக்கை வைத்தது எனவும் தெரிவித்துள்ளார்.
தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என பொய் புகார் கூறி வருகிறார் என விமர்ச்சித்துள்ளார்.