பாரதி பாப்பாவிற்கு இன்னும் 2 கோடி தேவைப்படுகிறது - கதறும் தாய்க்கு உதவிடுங்கள்

Money Mother Child Request Bharathi
By Thahir Nov 06, 2021 09:00 AM GMT
Report

முதுகு தண்டுவட தசைநார் சிதைவு மரபு நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாரதி பாப்பாவிற்கு நாளை இரண்டாவது பிறந்தநாள் சிகிச்சைக்கு 16 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில்>

இதுவரை 14 கோடி ரூபாய் வரை நிதி திரட்டப்பட்டது அறையில் இன்னும் இரண்டு கோடி ரூபாய் தேவைப்படுகிறது எனவே நாமக்கல் மித்ராவை காப்பாற்றியது போல் குழந்தையை காப்பாற்ற முதலமைச்சர் முன்வர வேண்டும் என பாரதியின் தாய் எழிலரசி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி சிராஜ்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் எழிலரசி தம்பதியினர் இவர்களுக்கு 23 மாத குழந்தை பாரதி.

இந்த குழந்தை முதுகுத்தண்டுவட தசைநார்ச் சிதைவு (Spinal Muscular Atrophy - Type 2) என்னும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அந்த குழந்தையின் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் ஒவ்வொன்றாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நோயிலிருந்து பாரதி பாப்பா குணமடைய இரண்டு வயதுக்குள்ளாக ஜோல்ஜென்ஸ்மா (Zolgensma) என்ற ஊசி மருந்தை செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஊசியானது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். இதன் விலை ரூபாய் 16 கோடியாகும்.

கடந்த 16 8 2021 முதல் நிதி திரட்டும் பணியில் பல்வேறு அமைப்பினர் தொண்டு நிறுவனத்தினர் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வந்தனர் மிகவும் சிரமப்பட்டு 14 கோடி ரூபாய் வரை நிதி திரட்டப்பட்டுள்ளது.

மேலும் மருந்து வாங்க இன்னும் இரண்டு கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்நிலையில் குழந்தை பாரதிக்கு நாளை இரண்டாவது பிறந்தநாள் .

எனவே குழந்தையின் உயிரைக் காப்பாற்ற பாப்பா பாரதிக்கு பிறந்தநாள் பரிசாக இரண்டு கோடி ரூபாயை மீண்டும் மக்களிடமே கேட்பதாகவும் மக்கள் உதவியோடு 15 நாட்களில் குழந்தை பாரதிக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற உதவுமாறு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பேசிய அவர் நாமக்கல் மித்ராவை காப்பாற்றியது போல் குழந்தை பாரதியை முதல்வர் காப்பாற்ற முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் தஞ்சையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தலைமையில் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.இந்த செய்தி காணும் நீங்களும் பாரதி பாப்பாவிற்கு உதவிடலாம். 

தொடர்புக்கு:

ஜெகதீஸ் (தந்தை) - 97917 93435

எழிலரசி (தாய்) - 95975 84987

Account Holder Name

R.Jagadeesh

Account Number 1147155000168550

Bank - KVB

Branch - KOMARAPALAYAM

IFSC Code - KVBL0001147