அபாய கட்டத்தை தாண்டினார் பிரபல பேச்சாளர் பாரதி பாஸ்கர்
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அபாய கட்டத்தை தாண்டியதாக அவரது நண்பரும் பேச்சாளருமான ராஜா ஐபிசி தமிழ்நாட்டிற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களை தனது பேச்சாற்றளால் ஈர்த்தவர் பாஸ்கர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மூளையில் ரத்தகசிவு ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில்
அனுமதிக்கப்படார்.
இந்நிலையில் பாரதி பாஸ்கருக்கு அறுவை சிகிச்சை முடிந்து தற்போது நலமாக இருப்பதாக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பிராத்தனைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக வெளியான தகவலால் அவரது
ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.