பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நலக்குறைவால் : அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

Apollo Hospital Bharathi Baskar Admit
By Thahir Aug 09, 2021 12:22 PM GMT
Report

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களை தனது பேச்சு திறமையால் ஈர்த்தவர்.

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நலக்குறைவால்  : அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதி! | Bharathi Baskar Admit Apollo Hospital

தமிழ்ப் பேச்சாளரான பாரதி பாஸ்கர், சன் தொலைக்காட்சி நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சி மூலமாகப் பிரபலமானவர். குறிப்பாக, பெண்கள் அதிகாரம் தொடர்பான அவரது வாதங்கள் அனைவரையும் கவரும் தன்மை உடையதாக இருக்கும். பொதுவாக, சமூகத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு தனது வாதத்தை முன்வைப்பார்.

பாரதி பாஸ்கர், சிட்டி வங்கியில் முக்கிய பதவியில் பணி செய்து கொண்டு வருகிறார். கல்கியில் சிறுகதைகள், தினமணியில் கட்டுரைகள், அவள் விகடனில் 'நீ நதி போல ஓடிக்கொண்டிரு' என்ற தொடர்கட்டுரையும் எழுதியுள்ளார்.

அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பிராத்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.