நடனக்கலைஞர் ஜாகீர் உசைனுக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் அனுமதி மறுப்பு - மன அழுத்ததால் மருத்துவமனையில் அனுமதி
கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்ற பிரபல பரதக்கலைஞர் ஜாகீர் உசேன். இவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். ஆனால் அங்கே அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
இந்த அவமானத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தனக்கு நடந்த அவமான குறித்து ஜாகிர் உசேன். ‘’நான் என் தாய்வீடாக கருதும் , தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டேன் . காரணம் என் பெயர் ’’ என்கிறார்.
அவர் மேலும் இந்த விவகாரம் குறித்து, ‘’முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு , பல அவமானங்களுக்கிடையே துரத்தப் பட்டேன் .
இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும் . ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது . என்னை துரத்தியவன் ஒரு நடத்தை கெட்டவன் மட்டுமல்ல . இந்நாட்டின் இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எதிரானவன் .
காலம் , திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும் . அரங்கன் என்றும் எமக்குத் துணை’’ என்று தெரிவித்திருக்கிறார்.
மன அழுத்தம் அதிகமாகி ஜாகிர் உசேன் மருத்தமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ‘’எனக்கு மன அழுத்தத்தால் ஏதேனும் நிகழ்ந்தால் , அதற்கு என்னை திருவரங்கத்தை விட்டு வெளியேற்றியவனே பொறுப்பு என்று கூறியிருக்கிறார். அவர் ராஜீவ்காந்தி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.