என் மீது குண்டு வீசப்படலாம் என எச்சரித்தனர் : காஷ்மீரில் ராகுல் காந்தி பேச்சு
கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடா யாத்திரை 3,080 கிலோமீட்டர் கடந்து 136 நாட்களுக்கு பின் ஸ்ரீநகரில் நிறைவுபெற்றது. ஸ்ரீநகரில் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி பேசியதின் சுருக்கம் உங்களுக்காக :
நான் காஷ்மீர் பகுதியினை அடைந்த போது இங்குள்ள காஷ்மீரிகள் என்னை தாக்கலாம் என என்னை எச்சரித்தனர். ஆனால் எனக்கு அன்பை மட்டுமே பொழிந்தனர் இந்த நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக நிற்பதும், இந்தியாவின் தாராளவாத மதச்சார்பற்ற நெறிகளைப் பாதுகாப்பதே இந்திய ஒற்றுமை பயணத்தின் நோக்கம்.
WATCH: श्रीनगर में भारत जोड़ो यात्रा के समापन पर श्री @RahulGandhi का एतिहासिक भाषण। #BharatJodoYatraFinale https://t.co/sHlpXAaG1c
— Congress (@INCIndia) January 30, 2023
மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே நோக்கம். காஷ்மீருக்கு சென்றால் கையெறி குண்டு வீசப்படலாம் என அதிகாரிகள் எச்சரித்தனர். காஷ்மீர் மக்கள் கையெறி குண்டுகளை தரவில்லை. மாறாக அன்பை மட்டுமே அளித்தனர். எனது முன்னேற்றம், காங்கிரஸின் நலனுக்காகவோ பயணம் மேற்கொள்ளவில்லை, நாட்டின் கட்டமைப்பையே மாற்றமுயலும் சித்தாந்தத்திற்கு எதிராகவே பயணம் சென்றேன்.

பயமில்லாமல் வாழ எனது குடும்பத்தினருக்கும் காந்தியும் கற்றுக் கொடுத்தனர். நான் எனக்காகவோ, காங்கிரஸ் கட்சிக்காகவோ இந்த நடைபயணத்தை மேற்கொள்ளவில்லை. நாட்டு மக்களுக்காக மேற்கொண்டேன்.
ஜம்மு காஷ்மீரில் பாஜக தலைவர்கள் யாரும் இவ்வாறு நடந்துவர முடியாது என்பதை நான் உங்களுக்கு உறுதியாக கூறுகிறேன்.
அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள். இவ்வாறு நடந்து செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதல்ல மாறாக அவர்கள் பயப்படுகின்றனர் எனக் கூறினார்.