அக்னிபத் எதிரொலி - நாடு தழுவிய முழு அடைப்பு.. 700க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து!

BJP Delhi India
1 வாரம் முன்

நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் நிலையில், இன்று பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் பொது முடக்கத்தை அறிவித்துள்ளன.

அக்னிபத்

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் வட மாநிலங்களில் தீவிரமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் நாடு தழுவிய முழு அடைப்பு காரணமாக இன்று 736 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அக்னிபத் எதிரொலி - நாடு தழுவிய முழு அடைப்பு.. 700க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து! | Bharat Bandh Over Agnipath Scheme

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா, டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

 பள்ளிகளுக்கு விடுமுறை

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலதில் இன்று நடைபெறவிருந்த 9 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் எதிரொலி - நாடு தழுவிய முழு அடைப்பு.. 700க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து! | Bharat Bandh Over Agnipath Scheme

தலைநகர் டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள டெல்லி - குருகிராம் எக்ஸ்பிரெஸ்வே பாரத் பந்த் போராட்டம் காரணமாக கடும் நெரிசலை சந்தித்தது. மேலும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தவுள்ளன.

 பலத்த போலீஸ் பாதுகாப்பு

கடந்த சில நாள்களாக நடைபெற்ற போராட்டத்தில் ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்களுக்கு சேதம் விளைவிக்கும் விதமான சம்பவங்கள் அதிகம் காணப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் ரயில்நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று அறிவிக்கப்பட்டுள்ள பந்த் காரணமாக ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தெற்கு ரயில்வே, சென்னை கோட்டத்தில் இருக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும்,

பொது முடக்கம்

அடுத்த அறிவிப்பு வரும்வரை நடைமேடை டிக்கெட்டுகள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும், போராட்டத்தை தூண்டும் விதமாக போலி செய்தி பரப்பிய 35க்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் குழுக்களை அரசு தடைவிதித்து முடக்கியுள்ளது.

இளைஞர்களின் போராட்டத்திற்கு மத்தியில் வேலைக்கான அறிவிப்பானையை வெளியிட்டுள்ள பாதுகாப்பு துறை,திட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் போராட்டக்கரார்களில் ஈடுபடக் கூடாது என உறுதி மொழி ஏற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது . 

ஹிட்லரைப் போலதான் மோடிக்கும் மரணம் - காங். தலைவர் சர்ச்சை பேச்சு

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.