நினைவாற்றல் குறைந்துவிட்டது - கணவரை இழந்து கலங்கிய பிரபல நடிகை !

Tamil Cinema Indian Actress
By Sumathi 1 மாதம் முன்
Report

தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டதாக நடிகை பானுப்பிரியா தெரிவித்துள்ளார்.

பானுப்பிரியா 

1980-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. மேலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், கடந்த 1998-ம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

நினைவாற்றல் குறைந்துவிட்டது - கணவரை இழந்து கலங்கிய பிரபல நடிகை ! | Bhanupriya Opens Up On Suffering From Memory Loss

இவர்களுக்கு அபிநயா என்கிற மகளும் உள்ளார். கடைசியாக தமிழில் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மற்றும் அசோக் செல்வன் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், "சமீப காலமாக எனக்கு உடல்நிலை சரியில்லை. நினைவாற்றல் இழப்பு.

நினைவாற்றல் இழப்பு

நான் கற்றுக்கொண்ட சில விஷயங்களை மறந்துவிட்டேன். பின்னர் நடனத்தில் ஆர்வம் குறைந்தது. நான் வீட்டில் நடனம் கூட பயிற்சி செய்வதில்லை. சமீபத்தில் ஒரு படத்தின் லோகேஷனில் டயலாக்குகளை மறந்துவிட்டேன். நினைவில் கொள்ள வேண்டிய பல விஷயங்களை மறந்துவிடுகிறேன்.

நினைவாற்றல் குறைந்துவிட்டது - கணவரை இழந்து கலங்கிய பிரபல நடிகை ! | Bhanupriya Opens Up On Suffering From Memory Loss

கணவரை பிரிந்ததாக வெளியான செய்தி தவறு. தற்போது என் கணவர் உயிருடன் இல்லாததால் அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன் எனது உடல்நிலை குறித்தும் வதந்திகள் பரவின. அப்போது நடிகை ராதா பதறியடித்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார் எனத் தெரிவித்துள்ளார். 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.