72 குண்டுகள் முழங்க இயக்குனர் பாக்யராஜ் உடல் தகனம்

Bhagyaraj
By Fathima Jun 28, 2026 06:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான நடிகர் பாக்யராஜின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜ் நேற்று காலை மாரடைப்பால் காலமானார்.

இவரது மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தை உலுக்கிய நிலையில் திரைப்பிரபலங்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

திரைத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது, தொடர்ந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது.

பாக்யராஜ் உடலை நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன் ஆகியோர் தோளில் சுமந்து சென்றனர். இறுதி ஊர்வல வாகனத்தில் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு இருந்தனர்.

நுங்கம்பாக்கத்தில் இருந்து பெசன்ட் நகர் வரை சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் பாக்யராஜ் உடல் மின்மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி, 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது, அரசு சார்பில் அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் ராஜ்மோகன் பங்கேற்றனர்.