சோகத்தில் மனமுடைந்த பாக்கியராஜ் - நடிகை பூர்ணிமா செய்த செயல்!
பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா காதல் கதை பேசப்பட்டு வருகிறது.
பாக்கியராஜ்
நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் பாக்கியராஜ் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது காதல் கதை தற்போது சிலாகிக்கப்பட்டு வருகிறது.
டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தின் போது பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா இடையே இயக்குனர் நடிகை என்ற உறவு தான் இருந்திருக்கிறது. அப்போது பிரவீனா உயிரோடு இருந்திருக்கிறார்.
திருமணம்
அதுபோல பூர்ணிமா அவர்களது வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளாராம். இருவருக்குமிடையே நல்ல நட்பு இருந்துள்ளது. பாக்யராஜ் மற்றும் பிரவீனாவின் திருமண நாளும் பூர்ணிமாவின் பிறந்த நாளும் ஒன்றுதானாம்.
அந்த நேரத்தில் தான் திடீரென பிரவீனா உடல்நிலை குறைவு காரணமாக காலமாகி இருக்கிறார். அதனால் பாக்கியராஜ் உடைந்துபோயுள்ளார். இந்நிலையில் தான், மீண்டும் பூர்ணிமாவை சந்தித்த பாக்யராஜுக்கு அவருடைய எளிமை பிடித்து இருக்கிறது. அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என எண்ணி கேட்டுள்ளார்.
அவர் ன்னுடைய அம்மாவிடம் பேசுங்கள் என்று கூறிவிட்டாராம். அதைத் தொடர்ந்து பாக்கியராஜ் பூர்ணிமாவின் குடும்பத்திடம் பேசி அனைவருடைய சம்மதத்தையும் பெற்று திருமணம் செய்துள்ளார்.