மகளின் காதலை ஜீரணிக்க முடியல; இதனால்தான் மன்னித்தேன் - ரகசியம் உடைத்த பாக்யாஜ்
மகள் குறித்து பாக்யராஜ் பகிர்ந்து கொண்ட தகவல் கவனம் பெற்றுள்ளது.
சரண்யா
பாக்யராஜ் - பூர்ணிமா ஜோடிக்கு சாந்தனு என்கிற மகனும் சரண்யா என்கிற மகளும் உள்ளனர். சரண்யா, 'பாரிஜாதம்' என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே ஹீரோயினாக நடித்தார்.
அதன் பின் சினிமாவில் இருந்து விலகினார். தற்போது தன்னுடைய அம்மா துவங்கிய பேஷன் டிசைனிங் நிறுவனத்தை கவனித்து வருகிறார். இதுவரை தன்னுடைய கணவர் யார் என்பதை வெளிப்படுத்தாத சரண்யா, தனக்கு ஒரு ஆண் குழந்தை அண்மையில் பிறந்த தகவலை தெரிவித்திருந்தார்.
பாக்கியராஜ் பேட்டி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பாக்யராஜ், என் பெண்ணோட காதலை என்னால ஜீரணிக்க முடியவில்லை. இந்த ஜாதி, மதம், பணம், எல்லாத்தையும் தாண்டி வேற ஒரு காரணம் இருந்தது. என் பொண்ணு தனியாக போனால், நாங்களும் கோபத்தில் அப்படியே இருந்தோம்.
ஆனால் அவர் கர்ப்பம் ஆகிட்டான்னு சொன்னதும், மனசு தாங்க முடியல. அப்புறம் பூர்ணிமா தான் கூட போனாங்க. பையன் பிறந்து இருக்கான்னு சொன்னவுடனே, நான் ஓடிப் போய் ஹாஸ்பிடல்ல பார்த்தேன்.
நான் தான் கையில முதல்ல அவனை வாங்குனேன். இப்போ அவன பாக்காம என்னால இருக்க முடியாது. அவனுக்கும் நான் இல்லாம இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.