வரும் 16-ம் தேதி பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்பு

punjab Chief Minister inauguration bhagwant-mann பகவந்த் மான் முதல்வராக பதவியேற்பு
By Nandhini Mar 11, 2022 11:39 AM GMT
Report

கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதனையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மன் போட்டியிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்திற்கு பக்வந்த் மான் முதல்வராகியிருக்கிறார்.

இதற்கான பதவியேற்பு விழா மிக விரைவில் நடைபெற உள்ளது. போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் சரண்ஜித் சிங் தோல்வி அடைந்துள்ளதால், அவர் பஞ்சாப் ஆளுநரை சந்தித்து, பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கியுள்ளார்.

வரும் 16-ம் தேதி பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்பு | Bhagwant Mann Punjab Cm Inauguration

இன்று ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், டெல்லியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சியின் தலைவர் மணீஷ் சிசோடியாவை சந்தித்தார். அப்போது, கெஜ்ரிவால் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் பகவந்த் மான்.

இந்நிலையில், பகவந்த் மான், பஞ்சாப் ஆளுநரை நாளை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பகவந்த் மான் வருகிற 16ம் தேதி பஞ்சாப் முதல்வராக பதவியேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.     

வரும் 16-ம் தேதி பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்பு | Bhagwant Mann Punjab Cm Inauguration