பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வீட்டிற்கு ரூ.10,000 அபராதம் - நடந்தது என்ன?
Punjab
By Nandhini
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.10,000 அபராதம் விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.10 ஆயிரம் அபராதம்
சண்டிகரில் உள்ள பஞ்சாப் முதலமைச்சரின் வீட்டின் பின்புறம் அனுமதியின்றி கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு, உள்ளூர் பாஜக கவுன்சிலர் புகர் கொடுத்தார்.
இதனையடுத்து, பஞ்சாய் முதலமைச்சர் பகவந்த் மான் வீட்டிற்கு சென்று நகராட்சி அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அப்போது, வீட்டின் பின்புறம் அனுமதியின்றி கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டியதால், பகவந்த் மான் வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
