பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை : கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

Karnataka
By Irumporai Sep 20, 2022 07:29 AM GMT
Report

பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை போதனைகள் இணைக்கப்படும் என கர்நாடக மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் அவர்கள் கூறியுள்ளார்.

  பள்ளி பாடத்தில் பகவத்கீதை

 கர்நாடக மாநிலத்தில் தற்போது பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை போதனைகள் இணைக்கப்படாது என்றும் அத்தகைய எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அமைச்சர் நாகேஷ் கூறினார்.

அமைச்சர் விளக்கம்

ஆனால் அதே நேரத்தில் வரும் டிசம்பர் மாதம் முதல் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை போதனைகள் சேர்க்க திட்டமிட்டு உள்ளோம் என்றும் அந்த பாடத்தில் பகவத் கீதை போதனைகள் உள்பட பல பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை : கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் | Bhagavath Geetha Schools Says Karnataka Minister

   மேலும் இதுகுறித்து பரிந்துரை செய்ய ஒரு குழு அமைத்து உள்ளதாகவும் அந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் பகவத் கீதை உள்பட ஒரு சில பாடங்கள் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் பாடப்புத்தகங்களில் உள்ள தவறுகள் சரி செய்யும் பணியையும் அந்த குழு பரிந்துரையின் படி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்