இந்தியா வந்த துளசி கபார்டின்.. கும்பமேளா தீர்த்ததை வழங்கிய பிரதமர் மோடி!
துளசி கபார்டின் அவர்களுக்கு கும்பமேளா தீர்த்ததை பிரதமர் மோடி வழங்கினார்.
கும்பமேளா தீர்த்தம்
அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கபார்ட் பல நாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இரண்டரை நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
ஜித் தோவல் தலைமையில் நடந்த சர்வதேச உளவு அமைப்பு தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டார்.அங்கு இந்திய அதிகாரிகளுடன் சைபர் பாதுகாப்பு, உளவுத்துறை ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
துளசி கபார்டின்
பின்னர் டெல்லியில் பேசிய அவர் ,’’சவாலான காலங்களில் பகவத் கீதையில் உள்ள போதனைகள் எனக்கு பலத்தையும் வழிகாட்டுதலையும் அளித்ததாக கூறினார்.
இதனைதொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கபார்டை சந்தித்து பேசினார். அப்போது உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் சேகரித்த கங்கை தீர்த்தத்தை அன்பளிப்பாக வழங்கினார்.