32 கிராமி விருதுகளை வென்று அமெரிக்க பாடகி பியோன்ஸே மாபெரும் சாதனை...!

World
By Nandhini Feb 06, 2023 08:43 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

32 கிராமி விருதுகளை வென்று அமெரிக்க பாடகி பியோன்ஸே வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க பாடகி பியோன்ஸே புதிய சாதனை

நேற்று பிறநாட்டு இசை விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், அமெரிக்க பாப் சூப்பர் ஸ்டார் பியோனஸ் 32 கிராமி விருதுகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக மறைந்த இசைக் கலைஞர் ஜார்க் சொல்டி 31 கிராமி விருதுகளை வென்றதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

"பிரேக் மை சோல்", சிறந்த பாரம்பரிய R&B நிகழ்ச்சியான "பிளாஸ்டிக் ஆஃப் தி சோஃபா" மற்றும் சிறந்த R&B பாடலான "கஃப் இட்" ஆகியவற்றுடன் சிறந்த நடன-மியூசிக் இசைப் பதிவுக்கான கிராமி விருதுகளை இவர் தட்டிச் சென்றார்.

இதனையடுத்து, அதிக கிராமி விருதுகளை வென்ற பெண் கலைஞர் என்ற பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.

beyonce-makes-grammys-breaks-record-for-most-wins