சாராய வியாபாரிக்கும் அமைச்சருக்கும் என்ன தொடர்பு? : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

ADMK D. Jayakumar
By Irumporai May 18, 2023 04:27 AM GMT
Report

ஊரை அழிப்பவனுக்கு கேக் ஊட்டிவிடுவதுதான் அமைச்சரின் பணியா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஷச்சாரய இறப்பு

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் விஷச்சாரயம் குடித்து 20 க்கும் மேற்பட்டேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் நேற்று முந்தினம் திண்டிவனத்தில் பிரபல சாராய விற்பனையாளர் மருவூர் ராஜா குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் , இவருக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேக் ஊட்டுவது போன்ற புகைப்படத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஜெயக்குமார் கேள்வி

அதில் , சாராய வியாபாரிக்கும் அமைச்சருக்கும் என்ன தொடர்பு? ஊரை அழிப்பவனுக்கு கேக் ஊட்டுவது தான் அமைச்சரின் பணியா? அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.