900 ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம் - இந்திய வம்சாவளி அதிகாரியின் அதிரடி நடவடிக்கை

bettercom 900employeeslayoff
By Petchi Avudaiappan Dec 06, 2021 04:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான பெட்டர் காம் ஒரே நேரத்தில் 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலில் சந்தையின் செயல் திறன், ஊழியர்களின் செயல் திறன், உற்பத்தி திறன் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஷால் கார்க் தலைமையிலான ஜூம் மீட்டிங் ஒன்று நடந்துள்ளது. இதில் பேசிய அவர், இதனை நீங்கள் கேட்க விரும்ப மாட்டீர்கள். நீங்கள் இந்த ஜும் காலில் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர். நீங்கள் தற்போதிலிருந்து பணி நீக்கம் செய்யப்படுகின்றீர்கள். உடனடியாக இப்போதிலிருந்தே பணி நீக்கம் செய்யப்படுகின்றீர்கள் என்று தெரிவித்துள்ளார். 

பெட்டர்.காமின் மொத்த ஊழியர்களில் 9% பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த குழுவில் உள்ள ஒரு ஊழியர் படம் பிடித்து இணையத்தில் பதிவிட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. 

3 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்பட்ட இந்த ஜும் காலில் 900 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.