ஒரே ஜூம் கால், 900 பேரின் வேலை காலிசெய்த ceo : நடந்தது என்ன?

fires bettercom 900people zoomcall
By Irumporai Dec 07, 2021 05:50 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஒரு ஜூம் கால் மூலம், பெட்டர் டாட் காம் நிறுவனத்தின் சி.இ.ஓ. விஷால் கார்க், 900 பேரை வேலையை விட்டு நீக்கியது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் பெட்டர் டாட் காம் .

 ரியல் எஸ்டேட், இன்சூரன்ஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது பெட்டர் டாட் காம் .இந்த நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில்,  பெட்டர் டாட் காம் நிறுவனத்தில் பணியாற்றும்  900 பேருக்கு கடந்த புதன் கிழமையன்று ஜூம் கால் அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய பெட்டர் டாட் காமின் சி.இ.ஓ. விஷால் கார்க் “

இந்த போன் காலில் நீங்கள் இருந்தால், நீங்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டவர்களில் ஒருவராக இருப்பீர்கள். உங்களுக்கு இனி பெட்டர் டாட் காமில் வேலை இல்லை’ என்று கூறி, அழைப்பை நிறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள விஷால் கார்க், ஜூம் காலில் பேசி, பணியாளர்களை நீக்கம் செய்தபோது தமக்கு அழுகையே வந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், ஒரு நாளில் 2 மணி நேரம் மட்டுமே வேலை பார்த்தவர்கள் என்றும், சக ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் திருட்டில் ஈடுபட்ட வர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.