வாயுத்தொல்லையை சரி செய்ய உடனடி வீட்டு வைத்தியம்.. இதை செய்து பாருங்கள்
நம் உடலுக்கு தேவையான முக்கியமான விஷயமே உணவு தான். அந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாத பொழுது நமக்கு நிறைய பிரச்சனைகள் வருகிறது.
அதில் முக்கியமாக வயிற்றுப் பிரச்சனை என்பது உடனடியாக சந்திக்கக்கூடிய ஒன்றாகும். அந்த வகையில் உங்களுக்கு வயிறு தொடர்பான வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் உடனடியாக வீட்டு வைத்தியம் செய்து அதை குணப்படுத்திக் கொள்ளலாம். அதை பற்றி பார்ப்போம்.
வெற்றிலையின் மகிமைகள்:
வெற்றிலை மிகவும் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் அதில் கால்சியம் பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்றவையும் அதில் நிறைந்து இருக்கிறது. அதனால் நாம் வெற்றிலையை உட்கொள்ளும் பொழுது நம்மை வாயுத் தொல்லையிலிருந்து அவை மீட்டுக் கொடுக்கிறது.
வயிற்று வாயுவுக்கு வெற்றிலை:
உங்களுக்கு திடீரென்று வாயுத்தொல்லை ஏற்படுகிறது என்றால் அதிலிருந்து உடனடியாக நிவாரணம் பெற நீங்கள் இரண்டு வெற்றிலைகள், ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு கப் தண்ணீர் மற்றும் இரண்டு முதல் மூன்று துளசி இலைகள் எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு வெற்றிலையை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக செய்து ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் துளசி இலையோடு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வையுங்கள். பிறகு துளசி மற்றும் வெற்றிலையிலிருந்து சாற்றை மெதுவாக வடிகட்டி அந்த வடிகட்டிய சாற்றில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது உடனடியாக உங்களுடைய வாயு தொல்லையிலிருந்து நீங்கள் விடுபடலாம்.
இந்த தயாரிக்கப்பட்ட பானத்தை நீங்கள் காலையில் அல்லது உணவுக்குப் பிறகும் குடிக்கலாம். இதை குடிக்கும் பொழுது உங்களுடைய வயிற்று வீக்கம் குறைந்து காணப்படும்.

நன்மைகள்:
செரிமான பிரச்சனையை உடனடியாக போக்க கூடிய குணம் இந்த வெற்றிலைக்கு உண்டு.
இந்த இலைகளில் உள்ள இயற்கை பொருட்கள் வீக்கம், அஜீரணம் மற்றும் லேசான வலியிலிருந்து நிவாரணம் கொடுக்கிறது. ஆதலால், அமிலத்தன்மையால் அவதிப்படுபவர்கள் நிச்சயம் வெற்றிலைகளை உட்கொள்ளலாம்.
அதோடு இந்த இலைகள் இருமல், சளி மற்றும் வீங்கிய ஈறுகளை சரி செய்யவும் நமக்கு உதவுகிறது. மிக முக்கியமாக ஒருவர் மன அழுத்தத்திலிருந்து விடுபடக்கூடிய அற்புதமான ஆற்றலை இந்த வெற்றிலை நமக்கு கொடுக்கிறது.
வெற்றிலை சாப்பிடும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை:
1. மேற்கண்ட அந்த மருந்தை அதிகமாக யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒன்று முதல் இரண்டு இலைகள் மற்றும் போதுமானது தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
2. புகையிலை அல்லது இனிப்பு வெற்றிலையை உட்கொள்வதை தவிர்க்கவும். சுத்தமான வெற்றிலையை மட்டுமே பயன்படுத்துங்கள்.
3. கர்ப்ப காலங்களில் இந்த வைத்தியத்தை தவிர்ப்பது நல்லது.
4. அதேபோல் தவறியும் வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிக்காதீர்கள்.