விழுப்புரத்தில் பண்டைய மன்னர்கள் வாழ்ந்த இந்த முக்கிய இடங்களை காணுங்கள்!
தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த இடங்களுக்கு சென்று மகிழுங்கள்.
இராஜகிரி (or) செஞ்சி கோட்டை
இது கி.பி. 1200-ல் கட்டப்பட்டது. இராஜகிரி என்பதன் பொருள் மன்னன் மலை என்பதாகும். இது செஞ்சி கடைவீதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோட்டை கருங்கற்களால் கட்டப்பட்டது.
மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது.
இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்தது முக்கோண வடிவமாக அமைந்துள்ளது செஞ்சிக்கோட்டை பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
திருவக்கரை தேசிய கல் மர பூங்கா
இது ஒரு புவியியல் பூங்காவாகும். இந்த பூங்கா விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திருவக்கரையில் அமைந்து உள்ளது. இந்த பூங்கா இந்தியா புவியியல் ஆய்வு மையத்தால் பராமரிக்கபடுகிறது. இது ஐரோப்பாவை சேர்ந்த இயற்கையியலர் சொன்னேரெட் என்பவரால் தான் முதலில் கல் மரங்கள் இருப்பு குறித்து இவ்விடத்தை பற்றி 1781இல் ஆவணம் செய்யப்பட்டது.
இங்கு இருக்கும் கல் மரங்கள் சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இங்கு 200 மர தண்டுகள் சுமார் 247 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு இருந்த காட்டு பகுதியானது பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட மிகபெரும் வெள்ளத்தால் மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்க வேண்டும், ஆனால் இந்த கல் மரங்கள் பலவும் படுக்கை நிலையில் உள்ளது.
செஞ்சி மதிற்சுவர்
செஞ்சியின் மகத்தான கோட்டை சுவர்கள் மூன்று அணுக முடியாத மலைகளான கிருஷ்ணகிரி, சக்கிலிட்ரக் மற்றும் ராஜகிரி ஆகியவற்றை இணைக்கின்றன. மூன்று மலைகள் முக்கோண வடிவில் வடிவமைக்கப் பெற்றிருக்கின்றன, அதே நேரத்தில் 20 மீட்டர் தடிமன் கொண்ட முக்கிய சுவர் அவற்றை இணைக்கிறது.
இந்த மூன்று மலைகளின் டாப்ஸ் அடக்க முடியாத சித்ததலங்களை உருவாக்குகிறது, அதே சமயத்தில் உள் கோட்டைக்கு பல கோட்டைகளும் வாயில்களும் உள்ளன. ராஜகிரி சிட்டாடல், 800 அடி உயரத்தில் , மிகவும் அணுக முடியாதபடி அமைந்துள்ளது. 20 மீட்டர் ஆழ்ந்தகன்ற இடைவெளி இப்போது ஒரு பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
மேல்மலையனூர் கோவில்
மேல்மலையனூர் என்பது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியாகும். இந்த வட்டத்திலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில் இருக்கும் புகழ் பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.
இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை அன்றும், மாசி மாதத்திலும் சிறப்புப் பூசைகள் நடத்தப் பெறுகின்றன. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் இங்கு விசேச நாட்களாகக் கருதப்படுவதால் அத்தினங்களில் இங்கு பக்தர்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.
ஆரோவில்
இது தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரிக்கு அருகில் உள்ளது. வேற்றுமையில் மனிதஇன ஒற்றுமையை உருவாக்குவதே ஆரோவில்லின் நோக்கம் ஆகும்.
இன்றைக்கு ஆரோவில் மட்டுமே சர்வதேச அளவில் மனிதஇன ஒற்றுமை, ஜீவியத்தின் திருவுருமாற்றம் ஆகியவற்றின் பரிசோதனைக்குரிய முதல் மற்றும் ஒரே நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலையான வாழ்வு, எதிர்கால மனித குலத்திற்கு தேவையான பண்பாட்டு, சுற்றுச்சூழல், சமூக, ஆன்மீகத் தேவைகள் ஆகியவற்றில் அக்கறையுடன் நடைமுறையில் ஆராய்ச்சி செய்து வருகின்றது.
மங்கள புத்த விகார்
மங்கள புத்த விகார் விழுப்புரம் மாவட்டம் வானுார் தாலுகா, புளிச்சப்பள்ளத்தில் அமைந்துள்ளது. இது ஆரோவிலுக்கு மிக அருகில் உள்ளது. ஆன்மீகம், யோகா மற்றும் தியானம் ஆகியவற்றில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த மங்கள புத்த விகார் பார்வையிட சிறந்த இடங்களில் ஒன்றாகும். மங்கள புத்த விகார் ஒரு பௌத்த வளாகம் ஆகும்.
புத்தா் கோவில் தியான மண்டபம் மற்றும் நுாலகத்துடன் முழுமையடைந்துள்ளது. இந்த கோவிலில் பெரிய தியான மண்டபம் உள்ளது. மையத்தில் ஒரு அழகான புத்தா் சிலை உள்ளது. அங்கு நுாறு போ் அமா்ந்து தியானம் செய்ய முடியும். புனித புத்தரை அலங்கரிக்கும் பூக்களை நீங்கள் காண்பீா்கள். மேலும் நீங்கள் தியானிப்பதற்கு முன்பு ஒரு பூஜை மெழுகுவா்த்தியை ஏற்றி வைக்கலாம். இந்த கட்டிட கலை எளிமையானது. ஆனால், கண்கவர 30 அடி உயரம் உள்ள புத்தரை கொண்டுள்ளது.