ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரியை உள்ளடக்கிய திருப்பத்தூரில் இந்த முக்கிய இடங்களுக்கு செல்லுங்கள்!

Tamil nadu
By Vinothini Jul 05, 2023 02:32 PM GMT
Report

தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூரில் நீங்கள் கண்டிராத இந்த இடங்களை கண்டிப்பாக காணுங்கள்.

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி

திருப்பத்தூரில் சுமார் 10 கி.மீ தொலைவில் ஏலகிரிமலையில் உள்ள அட்டாறு நதி சடையனூர் என்ற இடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது.மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக நதி வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

best-places-to-visit-in-tirupathur

நீர்வீழ்ச்சியின் அருகில் முருகன் கோயில் உள்ளது, இந்த மலையில் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் காணப்படுதால் இவ்வருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையில் பல்வேறு மக்களும் வந்து நீராடிச்செல்கின்றனர்.

ஏலகிரி மலைகள்

திருப்பத்தூரில் 30 கி.மீ தூரத்திலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து 224 கி.மீ தூரத்திலும், பெங்கலூரிலிருந்து 200 கி.மீ தூரத்திலும், ஏலகிரி மலை உள்ளது.

best-places-to-visit-in-tirupathur

ஏலகிரி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீ உயரத்தில் நான்கு மலைகளால் அமைந்துள்ளது. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கி.மீ ஆகும். இயற்கைப்பூங்கா, முருகன் ஆலயம், தொலைநோக்கி இல்லம், நிலாவூர் ஏரி மற்றும் பூங்கா,

best-places-to-visit-in-tirupathur

ஆஞ்சநேயர் ஆலயம், மங்கலம் தாமரைக்குளம், படகு குழாம் போன்ற இடங்கள் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாகும்.

அமிர்தி விலங்கியல் பூங்கா

அமிர்தி வனத்தின் பாதி பரப்பளவு வனவிலங்கு சரணாலயத்திற்கும் மாறு பாதி சுற்றுலாத் தலமாகவும் பிரித்துப் பராமரிக்கப்படுகிறது. சுமார் ஒரு கீலோமீட்டர் தூரத்தில் உள்ள மலையேற்றம் ஒரு அழகான நீர்வீழ்ச்சியை முழுமையாகப் பார்வையிட வழிவகுக்கிறது.

best-places-to-visit-in-tirupathur

நீர்வீழ்ச்சியில் பருவமழை காலங்களில் நீரின் வீழ்ச்சி அதிகமாக இருக்கும். இந்த வன விலங்குப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள் குரங்குகள், சிவப்புதலைகிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள்,வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் முதலியன வாழ்கின்றன.

ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோவில்

திருப்பத்தூரில் உள்ள மற்றொரு பிரபலமான இந்து கோவில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில். இங்கு அழகிய கட்டிடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்ற இது சுப்ரமணிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

best-places-to-visit-in-tirupathur

இந்த சிறப்பு மிக்க வழிபாட்டு தளத்திற்கு சென்று அங்கு உள்ள சிற்ப கலைகள் மற்றும் கட்டிடக்கலைகளை கண்டு ரசித்து மகிழுங்கள்.

ஜவ்வாது மலை

சவ்வாது மலை அல்லது ஜவ்வாது மலை கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்து வரும் மலைத்தொடர் ஆகும். இம்மலைத் தொடர்கள் வேலூர் , திருப்பத்தூர் , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 262 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது.

best-places-to-visit-in-tirupathur

இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும். இம்மலைத்தொடரில் உள்ள பீமன் அருவியும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவலூர் வானியல் ஆய்வகமும் முதன்மை சுற்றுலா இடங்களாகும்.