ராணிப்பேட்டை மாவட்டத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா? ஸ்பாட்ஸ் இதோ!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் பற்றி பார்ப்போம்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.தமிழ்நாட்டின் 36 ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி ராணிப்பேட்டையில் துவக்கி வைத்தார்.
இந்த மாவட்டம் ஒரு வளமான வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது. கனிம வளம் நிறைந்த மாவட்டம் மற்றும் செம்மண், செங்கல் களிமண் போன்ற கனிமங்களும் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன. இந்த மாவட்டம் தோராயமாக 2,755 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு சுற்றிப்பார்க்க வேண்டிய 7 இடங்களை பற்றி பார்ப்போம்.
மகேந்திரவாடி
அரக்கோணம் வட்டம், மகேந்திரவாடியில் அமைந்துள்ள மகேந்திர விஷ்ணுகிருகம் என்னும் குடைவரை குறிப்பிடத்தக்க ஓர் வரலாற்றுச் சின்னமாகும். இது குணபரன் என்று அழைக்கப்படும் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தது. இங்கே பல்லவ கிரந்த எழுத்துக்களில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது.
வெட்டவெளியான ஓர் இடத்தில் தனியாக ஒரு சிறுபாறையை குடைந்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். காண்போரை கவரும் வண்ணம் இரு முழுதூண்களுடன் இரு அரைத்தூண்களுடனும் மிகவும் எளிய முறையில் இக்குடவரை குடையப்பட்டுள்ளது. தூண்களில் போதிகை மட்டுமே குடையப்பட்டுள்ளது மிகவும் எளிமையாக உள்ளது.
டெல்லி கேட்
இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள, ஆற்காடு நகரில் அமைந்துள்ளது. இது ஆற்காட்டில் அமைந்துள்ளதால், இதனை ஆற்காடு டெல்லி கேட் என்றும் அழைக்கின்றனர். ஆற்காடு நவாப் கட்டுப்பாட்டில் இருந்த வட ஆற்காடு பகுதியை ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவ் கைப்பற்றினார்.
இதனையடுத்து இந்த வெற்றியின் சின்னமாக நுழைவு வாயில் ஒன்று கட்டப்பட்டது. 1751ம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும். தற்போது இது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ரத்தினகிரி முருகன் கோவில்
இந்த கோவில் ராணிப்பேட்டையில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள ரத்தினகிரி என்னும் ரத்தினகிரி என்னும் மலை மலையில் அமைந்துள்ளது. இந்த கோவில் 14ம் நூற்ராண்டில் அருணகிரி நாதரால் கட்டப்பட்டு 1980 பாலமுருகன் அடிமை சுவாமி என்பவரால் புனரமைக்கப்பட்டது.
இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பழமையான கோவிலாகும். ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் மகா சண்டியாஜ பூஜை மிக விமர்சியாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசன செய்கின்றனர். இந்த கோவிலுக்கு செல்லும் பொழுது பல இயற்கை காட்சிகளை காணலாம்.
காஞ்சனகிரி மலை
ராணிப்பேட்டை மக்களின் மனம் கவர் இடமான காஞ்சனகிரி மலை கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் கொண்ட சிறிய மலையாகும். பசுமையான இந்த மலை ஒரு சிறிய சிவன் மற்றும் முருகன் ஆலயங்களை கொண்டுள்ளது. மணி சத்தம் எழுப்பும் பாறை இம்மலையின் முக்கிய கவரும் அம்சமாகும்.