பெரம்பலூரில் ஒளிந்திருக்கும் இயற்கை அழகினை காண இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!

Tamil nadu
By Vinothini Jul 04, 2023 05:34 PM GMT
Report

 தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்றால் நீங்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடங்கள்.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் என்பது தமிழ் நாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது பெரம்பலூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோயிலாகும்.

best-places-to-visit-in-perambalur

இக்கோயிலில் மதுரகாளியம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மதுரகாளியம்மன் கோயிலுக்கு நேர் வடக்காகச் சோலை முத்தையா கோயில் அமைந்துள்ளது. இவரே செல்லியம்மன் மற்றும் மதுரகாளியம்மனின் காவல் தெய்வமாக விளங்குபவர். சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்பு படுத்தி இங்கு அம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டு வருகிறது.

கற்புடைத் தெய்வம் கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு மனம் பொறாமல் கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் இத்தலமடைந்து அமைதி கொண்டாள் எனவும் கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பி அமர்ந்தாள் எனவும் பெரியோர்கள் கூறுகின்றனர்.

ரஞ்சன்குடி கோட்டை

ரஞ்சன்குடி கோட்டை 17 வது நூற்றாண்டைச் சார்ந்த்து. இது தமிழ்நாட்டில் பெரம்பலூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் வடக்கே அமைந்துள்ளது. இது கி.பி 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.

best-places-to-visit-in-perambalur

பின்னர் கி.பி 17ஆம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டது. தற்பொழுது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கி.பி 1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும் (முகமது அலி உதவியுடன்) பிரஞ்சு படையினருக்கும்(சந்தா சாகிப் உதவியுடன்) இடையே நடைபெற்ற வாலிகொண்டா போர் நடைபெற்ற இடம்.

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி திருக்கோயில்

செட்டிகுளம் ஊரின் நடு நாயகமாக விளங்குகின்ற அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலும், ஊரின் கீழ்புறம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலும் வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோயிலாகும்.

best-places-to-visit-in-perambalur

உறையூர் சோழன் பராந்தகனுக்கும் பாண்டியமன்னன் குலசேகரனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு எழுப்பப்பட்ட திருக்கோயிலே அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலாகும். மலையின் மீது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தன் கையில் 11 கணுக்களை உடைய செங்கரும்பினை ஏந்தி காட்சி அளிப்பது சிறப்பு அம்சமாகும்.

தேசிய கல்மர பூங்கா

இது 1940-ம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின், புகழ்பெற்ற புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு 120 மில்லியன் ஆண்டு பழங்கால மரம் கல்லாக மாறியிருக்கலாம் என நம்பப்படுகிறது, இது இந்த பகுதியில் உள்ள சுண்ணாம்புக்கல் காலத்தின் போது கடலில் இருப்பதற்கான ஆதாரமாகக் கருதப்படுகிறது.

best-places-to-visit-in-perambalur

இந்த புதைபடிவ ஒரு கூம்பு, 18 மீட்டர் நீளமுள்ளது. இதேபோன்ற புதைக்கப்பட்ட மர படிவுகள் அருகிலுள்ள வரகூர், அனைப்பாடி, அலுந்தலைப்பூர் மற்றும் சரடமங்கலம், ஆகியவை சாத்தனூரின் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன.

கோரையாறு அருவி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள கோரையாறு கிராமத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பச்சைமலை மீது கோரையாறு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்நீர் வீழ்ச்சியில் மலை உச்சியிலிருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட நீர் தேக்கமும் உள்ளது.

best-places-to-visit-in-perambalur

இவ்வ‌ருவியில், சாதாரண மழைபெய்தால் கூட நீர் கொட்டும். குறிப்பாக அக்டோபர் மாதத்தின் இறுதியில் தொடங்கி, நவம்பர், டிசம்பர் மாதங்களே கோரையாறு அருவியின் சீசன் நாட்களாகும். இந்த மழைநீர் கோரையாறு, தொண்டமாந்துறை வழியாக கல்லாற்றில் கலக்கிறது.