நாகப்பட்டினம் எதுக்கெல்லாம் ஃபேமஸ் - பார்த்ததும் ஈர்க்கக்கூடிய இடங்கள் ஏராளம்!
இந்தியாவின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாக நாகப்பட்டினம் பெருமை கொள்கிறது. சிறிய அருங்காட்சியகம், உயரமான கலங்கரை விளக்கம் மற்றும் நீண்ட மற்றும் அழகான கடற்கரை ஆகியவை இந்த நகரத்தின் சில ஈர்ப்புகளாகும்.
வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி இந்தியாவின் மிகவும் பிரபலமான யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகும்.உலகம் முழுவதிலுமிருந்து யாத்ரீகர்கள் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னையின் பசிலிக்காவிற்கு வருகை தருகின்றனர். தேவாலயமே அழகான கட்டிடக்கலை கொண்ட ஒரு பெரிய அமைப்பாகும்.
தரங்கம்பாடி
தரங்கம்பாடி ட்ராங்குபாரின் முக்கிய அம்சம் அதன் டேனிஷ் கட்டிடக்கலை ஆகும். 1620 இல் கட்டப்பட்டது. இந்த கோட்டை தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது மற்றும் தொல்லியல் அருங்காட்சியகம் உள்ளது.
பூம்புகார்
பூம்புகார் இது காவேரிபூம்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. இது முன்காலத்தில் சோழர்களின் துறைமுகப்பட்டினமாக இருந்தது. இந்த ஊர் காவிரி கடலும் சங்கமிக்கும் இடமாகும். சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கோவலனும் கண்ணகியும் இந்த ஊரில் தான் வாழ்ந்தவர்கள். வரலாற்றைக் கூறும் வகையில் இங்கு சிலப்பதிகார கலைக்கோயில் சிற்பங்கள் சிலப்பதிகாரத்தின் முக்கிய காட்சிகளை கண்முன் நிறுத்துகின்றன.
நாகூர்
நாகூரில் உள்ள தர்கா மிகவும் பிரபலம். சூஃபி துறவியான ஷாகுல் ஹமீதுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற ஆலயம். அப்துல் காதர் என்று அழைக்கப்படும் ஒரு குழந்தை சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மாகாணத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ஒரு புனித இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தது. அல்லாஹ்வின் அருளுக்காக ஆசைப்பட்டு தன் சீடர்களுடன் வெகுதூரம் பயணம் செய்தார். அவரது நினைவுச்சின்னங்களை இங்கு காணலாம்.
கோடியக்கரை
கோடியக்கரை, பாயிண்ட் கலிமேர் என்றும் அழைக்கப்படுகிறது. இது பால்க் ஜலசந்தியில் அமைந்துள்ளது. சுமார் 312.17 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்த வனவிலங்கு சரணாலயம், நீல பக், புள்ளிமான், காட்டுப்பன்றி, அரை காட்டு குதிரைகள், நீர்ப்பறவைகளின் இருப்பிடமாக உள்ளது.
சிங்காரவேலன் கோயில்
சிக்கல் சிங்காரவேலன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற இடம். இந்த கோவிலின் தூண்கள் நுட்பமான மற்றும் அற்புதமான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தின் நேர்த்தியான ஓவியங்களில் வண்ணமும் சித்தரிப்பும் குறிப்பிடத்தக்கவை. இந்த கோவிலில் வழிபாடு செய்வதால் இந்த கோவிலில் வழிபாடு செய்வதால் அனைத்து தடைகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
டச்சு கோட்டை
டச்சு கோட்டை கிபி 1920இல் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. இந்த கோட்டை டச்சுக்காரர்களின் கட்டடக் கலையின் சிறப்பை எடுத்துக்கூறுகிறது. இந்த கோட்டை தற்போது தமிழக ஆவண காப்பாக துறையின் பொறுப்பில் உள்ளது. இதில் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.
வைத்தீஸ்வரன் கோயில்
வைத்தீஸ்வரன் கோயில் பழமையான கோயிலாகும். இங்கு எழுந்தருளியுள்ள சிவன் நோய்களை குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் ஆக கருதப்படுகிறார். இங்குள்ள கோபுரங்கள் மண்டபம் தூண்கள் என்று கோயில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள உறுப்பினர் பற்றி சைவ பெரியவர்கள்பாடல் பாடியுள்ளனர்.
திருக்கடையூர்
திருக்கடையூர் ஆதி சிவனின் பெருமைகளை எடுத்துக்கூறும் எட்டு கோயில்களில் ஒன்று. இது ஒரு மகத்தான சத்தி தலமும் கூட 'சொல்லடி அபிராமி' என்று அபிராமி பட்டர் அழகு தமிழில் உரிமையோடு அம்மையை அதட்டி அந்தாதி வாடிய ஞான தலம் இது. அறுபதாவது கல்யாண நாளை கொண்டாடுவதற்கான ஒரே தலமாக பார்க்கப்படுகிறது.
சீர்காழி
சீர்காழியில் உள்ள சிவன் கோவில் தமிழகத்திலேயே அதிக சக்தி வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. ஞானசம்பந்தர் இந்த ஊரில்தான் பிறந்தார் புகழ்பெற்ற கர்நாடக சங்கீதப் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் இந்த ஊரில் தான் பிறந்தார்.