பெரும்பாலும் கோவில்களால் சூழப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு சென்றால் இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!
தென்னிந்தியாவில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சென்றால் கண்டிப்பாக காண வேண்டிய இந்த இடங்களுக்கு செல்லுங்கள்.
ஸ்ரீ வீரட்டேஸ்வரர் கோயில்
திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூரில் கீழையூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது.
இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மேலும் இது அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று ஆகும்.
ஆதி திருவரங்கம்
திவ்ய தேசம் 108 கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இவைகள் அனைத்தையும் விட சிறப்பானது மற்றும் பழமையானது ஆதி திருவரங்கம். ஏன் என்றால் ஆதி திருவரங்கம் திருமாலின் முதல் அவதாரத்தில் நிர்மாணிக்கப்படுகிறது. ஆதி திருவரங்கம் அடுத்து ஸ்ரீரங்கம் என்ற சொல் இங்கு அணைத்து பகுதிகளிலும் பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்திலேயே மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் "பெரிய பெருமாள்" என அழைக்கப்படுகிறார்.
கல்வராயன் மலை
கல்வராயன் மலைகள் தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டத்தில் உள்ளது. இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதி ஆகும். பச்சைமலை, ஜவ்வாது மலைகள், சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன.
1,095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2,000 முதல் 3,000 அடி வரை உள்ளது. கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடபகுதி 'சின்னக் கல்வராயன்' மற்றும் தென்பகுதி 'பெரிய கல்வராயன்' என்று குறிப்பிடப்படுகின்றது.
'சின்னக் கல்வராயன்' மலைகள் சராசரியாக 2,700 அடி உயரமும், 'பெரிய கல்வராயன்' மலைகள் சராசரியாக 4,000 அடி உயரமும் கொண்டவை.
உலகளந்த பெருமாள்
உலகளந்த பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ள ஒரு பெருமாள் கோயிலாகும். இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார்.
கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன. பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரோடும் திருமங்கை மன்னனும் இந்தத் தலத்தை மங்களா சாசனம் செய்திருக்கிறார். கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் நகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
திருநரங்கொன்றை
உளுந்தூர்பேட்டையில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள இக்கிராமம் திருக்கோயிலூரில் இருந்து 21 கி.மீ. இந்த கிராமத்தில் ஒரு ஜைன குகை மற்றும் பார்ஸ்வனதா மற்றும் சந்திரபிரபா இரண்டு கோவில்கள் உள்ளன.
8-9 ஆம் நூற்றாண்டுகளில் இந்தக் குகைகள் வீரசங்கர்களின் மடங்களாக இருந்தன. கோவில்களில் காணப்படும் வெண்கலச் சிலைகள் ஒரு தனி சிறப்பு உண்டு. ஆண்டு விழாவை (ஜனவரி-பிப்ரவரி) கொண்டாட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜைனர்கள் அதிக அளவில் பங்கேற்கின்றனர்.
மேல்நாரியப்பனூர்
தேவாலயம் 100 ஆண்டுகள் பழமையான தேவாலயம் சென்னை – சேலம் நெடுஞ்சாலையில் சின்ன சேலத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் புனித அந்தோனியாரின் பக்தரான கஞ்சனால் கட்டப்பட்டது.
இந்த மேல்நாரியப்பனூர் தேவாலயம் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் அற்புதங்களின் அரசரான பதுவாவின் புனித அந்தோனிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜூன் 13ம் தேதி திருவிழா கொண்டாடப்படுகிறது.