சிங்கார சென்னையில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்கள்..!

Chennai
By Thahir Jul 17, 2023 08:00 AM GMT
Report

சென்னைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து வேலை செய்து வருகின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னையில் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அவைகளை நாம் வரிசையாக பார்க்கலாம்.

மெரினா கடற்கரை

சென்னை என்றாலே நம்மில் பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மெரினா கடற்கரை தான். இந்த கடற்கரை இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் 2வது நீண்ட கடற்கரையாகும்.

best places to visit in chennai

வடக்கில் புனித சார்ஜ் கோட்டையின் தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ வரை உள்ளது. இந்த கடற்கரையை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் வந்து செல்கின்றனர்.

மெரினா கடற்கரை ஓரத்தில் செப்பாக் அரண்மனை, செனட் ஹவுஸ், பி.டபிள்யூ.டி அலுவலகம், பிரசிடென்சி கல்லுாரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவை அமைந்துள்ளது. மேலும் இந்த கடற்கரையில் உழைப்பாளர்கள் சிலை மற்றும் காந்தி சிலை ஆகியவை உள்ளனர்.

அரசு அருங்காட்சியகம்

சென்னையின் முக்கிய வரலாற்று சுற்றுலா தலங்களில் ஒன்று அரசு அருங்காட்சியகம். 1851 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகம் தென் இந்தியாவின் பல வரலாற்றை பற்றிய தகவல்களை கொண்டுள்ளது.

best places to visit in chennai

இந்த அருங்காட்சியகம் காலை 9.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கும்.

இங்கு குழந்தைகளுக்கான அருங்காட்சியகம், ட்ரோன்ஸ் கேலரி, தேசிய கலை அரங்கம் உள்ளிட்ட பல அரங்குகள் தனித்தனியாக அமைந்துள்ளது. அரசு அருங்காட்சியகம் எழும்பூரில் உள்ள பாந்தியன் சாலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புனித ஜார்ஜ் கோட்டை

புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. 1644 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோட்டை இன்று வரை சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

best places to visit in chennai

வரலாற்றை நினைவு கூறும் இந்த சிறப்பு மிக்க இந்த கோட்டையை காண மக்கள் அதிக அளவில் பார்வையிட்டு செல்கின்றனர். இந்த கோட்டையை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மக்கள் பார்வையிடலாம்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

510 ஹெக்டர் பரப்பளவில் கடந்த 1855 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பூங்கா இதுவாகும். பின்னர் இந்த பூங்காவிற்கு அறிஞர் அண்ணா பெயர் சூட்டப்பட்டது. இந்த உயிரியல் பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

வடபழனி முருகன் கோவில்

சென்னையின் பெரும்பாலான பக்தர்கள் சென்று தரிசனம் செய்யும் கோவில்களின் மிக முக்கியமானது வடபழனி முருகன் கோவில் ஆகும்.

best places to visit in chennai

திருமணம் செய்யவும், புதுமணத் தம்பதிகள் வந்து வழிபடவும் தகுந்த கோவிலாக இது நம்பப்படுகிறது. செல்வமும் உடல் நலமும் பெற்று வாழ வேண்டி இங்கு மக்கள் செல்வார்கள். காலை 5.30 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.