விருதுநகர்ல வித விதமா சாப்பிடணுமா? - இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க
பட்டாசு தொழிற்சாலை , பிரின்டிங் பிரஸ், நூற்பாலை, விசைத்தறி ஆலை என மாநிலத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்று விருதுநகர் மாவட்டம். இது போக முக்கிய ஆன்மீக தலமான ஆண்டாள் கோவிலுக்கும், சதுரகிரி மலைக்கும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இங்க வரும் போது எங்க சாப்பிடணும்னு தெரியலையா இந்த கட்டுரை உங்களுக்காக தான்
பால்கோவா
பால்கோவானாலே ஸ்ரீவில்லிபுத்தூர் தான். இங்கு தயாரிக்கப்படும் பால்கோவா புவிசார் குறியீடு பெற்றுள்ளது. ஆண்டாள் கோவில் ஒட்டியுள்ள வெங்கடேஸ்வரா கடை தான் கூட்டம் அலை மோதும்.
இதற்கு அடுத்ததா பஸ்ஸ்டாண்ட் கிட்ட உள்ள புளியமரத்தடி பால்கோவா கடை. இங்க கடை மூடுற நேரத்துல போன கூட சுட சுட பால்கோவா கிடைக்கும். பால்கோவா மட்டுமில்லாம இங்க அல்வா, பால் அல்வா எல்லாமே சுவையா இருக்கும்.
சாத்தூர் சேவு
விருதுநகரில் மற்றொரு ஸ்பெஷல் ஐட்டம் சாத்தூர் சேவு. சாத்தூர் சண்முக நாடார் கடை தான் இதுக்கு ரொம்ப பிரபலம். சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்த கடை நூறு வருட பழமையானது. விலை 250 கிராம் ரூ100
அசைவ உணவு
The New hot pot Family Restaurant
இந்த உணவகம் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட குளிர்சாதன வசதியுடன் உள்ள உணவகம்.
இங்க ஹைதராபாத் பிரியாணி தான் பிரசித்தி பெற்றது. அது போக தந்தூரி, க்ரில், பீட்ஸா, பர்கர், மோமோஸ் என எல்லாமே கிடைக்கும். மேலும் 20 வகையான தோசையும் உண்டு.
பொறிச்ச புரோட்டா
பண் பரோட்டா, சிலோன் பரோட்டா, வீச்சு பரோட்டானு பல வகையான பரோட்டா இருந்தாலும் பொரிச்ச புரோட்டாவோட பூர்வீகம் விருதுநகர் தான். 3 தலைமுறையா பிரியாணி கடை நடத்தி வரும் ஹசன் பிரியாணில பொரிச்ச புரோட்டா ரொம்ப பேமஸ். விருதுநகர் பேருந்து நிலையம் கிட்ட உள்ள உணவகம் இது. இங்க பொரிச்ச பரோட்டாவுக்கு புறா கறி பெஸ்ட் காம்பினேஷன்.
விருதுநகர் பர்மா ஹோட்டல்
விருதுநகரோட இன்னொரு அடையாளம் வி.வி.வி கல்லூரிக்கு எதிரே உள்ள பர்மா ஹோட்டல் ,1947 ல தள்ளுவண்டி கடையா ஆரம்பிச்சு இப்போ விருதுநகர்ல 5 கிளையோட இருக்கு. இங்கயும் பரோட்டா பேமஸ். அதோட ஈரல் கிரேவி, புறா ஃபிரை, ரத்தப் பொரியல், எல்லாம் வாடிக்கையாளர்களோட ஃபேவரிட்
ஹோட்டல் டீலக்ஸ்
சிவகாசில உள்ள ஹோட்டல் டீலக்ஸ் இன்னொரு மிஸ் பண்ண கூடாத உணவகம். இங்க உள்ள மாதிரி மூளை + பரோட்டா வேற எங்கேயுமே கிடைக்காது.
கருப்பையா நாடார் ஈவினிங் மட்டன் ஸ்டால்
சாத்தூர் பைபாஸ்ல உள்ள இந்த கடையும் அசைவ உணவுக்கு பேமஸ். பரோட்டா, குடல் குழம்பு, மூளை வறுவல் எல்லாம் வாடிக்கையாளர் ஃபேவரிட். இங்க உள்ள கரண்டி ஆம்ப்லேட் மட்டும் மிஸ் பண்ணிராதிங்க.
கூரை கடை
ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் கிட்ட உள்ளது தான் கூரை கடை. இங்க தம் பிரியாணி, மட்டன் சாப்ஸ் ரொம்பவே பேமஸ். மதியம் போன கூட்டம் அலைமோதும். மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை இருக்கும்.
சைவ உணவு
ஆனந்தா போர்டிங்
சைவ உணவு சாப்பிடனும்னா ராஜபாளையத்துல உள்ள ஆனந்தா போர்டிங் தான். இங்க இட்லி, தோசை, வெண்பொங்கல், கோதுமை பூரி, உருளைகிழங்கு பட்டாணி சப்ஜி என எல்லாமே தரமான சுவைல இருக்கும்.
கதிரவன் ஹோட்டல்
ஸ்ரீவில்லிபுத்தூர் கீழ ரத வீதியில் 100 ஆண்டு பாரம்பரியமிக்க கதிரவன் ஹோட்டல் சைவ உணவுக்கு பெயர் பெற்றது.
காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும். இங்கு மதியம் மீல்ஸ், பூரி, வடை, கேசரி எல்லாமே ஸ்பெஷல். இங்க கூகிள் பே, டெபிட் கார்டுல பணம் செலுத்த முடியாது. பணமா தான் வாங்குவாங்க. அதனால சாப்பிட போகும் போது கூகிள் பே நம்பி போகாம கைல பணம் கொண்டு போங்க.