தேனி சாரலுக்கு மட்டுமல்ல சாப்பாட்டுக்கும் ஃபேமஸ் தான் - இதை நோட் பண்ணுங்க!
தேனி மாவட்டம்
இயற்கை அழகு மிகுந்த ஒரு பேரின்பத்தை தரக்கூடிய மாவட்டம் என்றால் அது தேனி தான். வசீகரிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நிழல்களில் அமைந்துள்ளது. குளிர்ந்த மூடுபனியால் தழுவும் இந்த ஊர் நீர்வீழ்ச்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
"தென் மேற்கு பருவக்காற்று தேனி பக்கம் வீசும்போது இன்ப சாரல்" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றதுபோல் சிலுசிலுவென அடிக்கும் காற்றோடு பச்சைக் கம்பள விரித்ததுபோல் காட்சியளிக்கும் தேனியின் வனப்பு சலிப்படைய செய்யாது. இப்படி ஒரு எழில் மிகுந்த ஊரில் ருசியான சாப்பாடு பற்றி சொல்லவா வேண்டும்..
எனவே தேனி மாவட்டத்தில் எங்கு சென்றால் சிறந்த உணவை சாப்பிடலாம் என்பதை காணலாம்.
சைவ உணவுகள்
தேனியில் நல்ல சுவையான சைவ சாப்பாடுகளை ருசிக்க இங்கு ஏராளமான உணவகங்கள் அணி வகுத்துள்ளது. அந்த வகையில்,
ஸ்ரீ பாலாஜி பவன்
வாதவீரநாயக்கன்பட்டி, NRT நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாஜி பவனில் சைவ சாப்பாடு சாப்பிட ஓர் உணவகம் எனலாம்.
இங்கு காலை சிற்றுண்டியில் தொடங்கி, மத்தியம் சைவ மீல்ஸ், இரவு டின்னர் வரை அனைத்து உணவு வகைகளும் சுவையாக சாப்பிடலாம்.
மாருதி பெவிலியன் ரெஸ்டாரண்ட்
குழந்தைகளுக்கு ஒரு சிறிய பூங்கா, செல்பி ஸ்பாட், நல்ல சுற்றுசுழலும், பொழுதுபோக்கும் அமைத்து தரக்கூடிய வகையில் இந்த உணவகம் அமைந்திருக்கிறது.தேனி அல்லிநகரம், மாருதி பேக்கரிக்கு பின்னால் உள்ளது இந்த மாருதி பெவிலியன் ரெஸ்டாரண்ட்.
இங்கு அனைத்து விதமான சைவ அசைவ ரக உணவுகளும் கிடைக்கிறது. இட்லி தோசை, பூரி பொங்கல் என தொடங்கி, பிரீரியாணி, பிரைட் ரைஸ், பளூடா,மீல்ஸ்,கேக், ஸ்வீட்ஸ்,இத்தாலியன் உண்வுகள் உட்பட இங்கு கிடைக்கிறது. சுற்றுலா பயணிகள் தாங்கள் நேரத்தை குடும்பத்தோடு ஒரு உணவகத்தில் கழிக்க இது ஒரு சரியான இடமாகும்.
ஸ்ரீ ஆர்யாஸ்
ஸ்ரீ ஆர்யாஸ் ப்யூர் ரெஸ்டாரண்ட் தேனி, கம்பம் ரோட்டில் அமைந்திருக்கிறது,இங்கு உயர்தர சைவ உண்ணவுகள் மட்டுமே கிடைக்கும்.
இங்கு சைவ ஆம்லெட் மிக பிரபலம். அதோடு,பொங்கல், போடி தோசை,சப்பாத்தி, பரோட்டா, கீ ரோஸ்ட், புல்கா,நான் சைவ கொடுத்து பரோட்டா போன்ற எல்லா வகை உணவுகளும் சுவைக்கலாம்.
அசைவ உணவுகள்
அசைவ சாப்பாடுகளை பொறுத்தவரை தேனியில் அதற்கென ஒரு தனி சுவை இருக்கிறது எனலாம். இந்த மாவட்டத்தின் அசைவ விருந்துக்கு இணை வேறெதுவும் இருக்காது. அந்த வகையில்,
ஹோட்டல் தட்டி விலாஸ்
தேனியின் மிக பிரபல அசைவ ஹோட்டல் என்றால் அது தட்டி விலாஸ் தான்.
இங்கு பிரியாணி,நாடு கோழி சுக்கா,அய்ர மீன் குழம்பு, கிராப் ரோஸ்ட்,தேனி பேமஸ் பஞ்சு பரோட்டா,முஸ்தபா பரோட்டா ஆகிய அனைத்து வித உணவுகளின் சுவையும் அசத்தலாக இருக்கும் என்கின்றனர்.மேலும், இங்கு கிடைக்கும் சாக்லேட் பரோட்டாவை கண்டிப்பாக ருசித்து பாருங்கள்.
ஜோதிஸ் ஹோட்டல்
அடுத்ததாக தேனியை அசத்தி வரும் மார்க்கையன்கோட்டை ஜோதிஸ் ஹோட்டல். இங்கு 30+ வெரைட்டி அசைவ உணவுகள் விற்கப்படுகிறது.
சிக்கன்,மட்டன்,மீன், கிராப் ப்ரை, புறா கறி, பேப்பர் சிக்கன், போன்ற இன்னும் பல விதமான உணவுகள், சிறந்த சுவையில் வழங்கப்படுகிறது.குறிப்பாக இங்கு ரூ.50க்கு அன்லிமிடெட் அசைவ மீல்ஸ் கிடைக்கிறது.எனவே தேனி பக்கம் நல்ல சுவையான மற்றும் மலிவான சாப்பாடு வேண்டுமானால் இங்கு செல்லலாம்.
கூரை கடை
அடுத்து தேனி நாட்டுக்கோழி விருந்து என்றாலே அது கோடாங்கிபட்டியில் உள்ள போஸ் கடை தான் பிரபலமாம். இந்த கடையை அந்த ஊர் மக்கள் கூரை கடை என்றும் அழைக்கின்றனர்.
இங்கு இட்லி நாட்டுக்கோழி குழம்பு, கொத்து பரோட்டா, ஈரல் தலைக்கறி, மட்டன் சுக்கா, மட்டன்,சிக்கன் வாழையிலை, குடல் போன்ற உணவு வகைகள் அங்கு அதிகம் விற்பனையாகும் உணவுகளாம்.
ஸ்னாக்ஸ்
தேனியை சுற்றி பார்த்துவிட்டு சற்று களைப்போடு இருப்பவர்களுக்கு தெருக்களில் அங்கங்கே சிறு கடைகளில் கிடைக்கும் சுவையான ஸ்னாக்ஸ் வகைகளுக்கு பஞ்சமே இல்லை. அந்த வகையில், பகவதி அம்மன் கோயில் ஸ்ட்ரீட்,விஸ்வருத்ரம் ஜவுளி கடை வாசலில் இந்த குட்டி கடை அமைந்திருக்கிறது.
இங்கு உடலுக்கு ஆரோக்கியமான புட்டு.சுண்டல்,கப்பா கிழங்கு,கம்பு கூழ், பருத்து பால் போன்ற உணவுகள் கிடைக்கிறது. அடுத்ததாக மாலை வேளையில் சாப்பிட ஒரு உகந்த ஸ்னாக்ஸ் என்றால் அது MRR நகர், பழனி செட்டிபட்டியில் உள்ள B முருகன் சமோசா ஸ்டால் தான்.
இதை 2 ருபாய் சமோசா கடை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பாயா வடை, சோமஸ், கோலா உருண்டை, முட்டை பயிறு,பஜ்ஜி, வடை ஆகிய ஸ்னாக்ஸ் வகைகள் மிக பிரபலம்.