சிவகங்கை போறவங்க.. கண்டிப்பா இந்த உணவையெல்லாம் ருசிக்க மறந்துராதீங்க!
சிவகங்கையில் எங்கெல்லாம் ருசியான சாப்பாடு கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பழங்காலத்து கோயில்களும்.. வரலாற்று சிறப்பு மிக்க அரண்மனைகளும்.. தமிழ் பாரம்பரியமும் வேரூன்றிய நகரமாக திகழ்கிறது சிவகங்கை. இங்கு தான் தமிழ்நாட்டின் மிக பழமையான குகை கோயில்களில் ஒன்றான கற்பக விநாயகர் கோயில் உள்ளது.
பாரம்பரியத்தை பெருமையுடன் பறைசாற்றும் வண்ணமயமான நகரம் இது. இப்பேரு பெற்ற சிவகங்கைக்கு ஒரு பயணத்தைத் திட்டமிட்டிங்கனா ஊரை சுற்றி பார்ப்பது மட்டுமின்றி நாக்குக்கு ருசியா எங்கெல்லாம் சாப்பிடலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மலைராம் ஹோட்டல்
சிவகங்கை, அரன்மணை வாசலில் அமைந்துள்ளது இந்த மலைராம் ஹோட்டல். குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் வகையில் சொகுசான ரெஸ்டாரண்டாக அமைந்துள்ளது. மேலும் இங்கு ஏசி, நான் - ஏசி சீட்டிங் வசிதியும் உள்ளது.
அதுமட்டுமின்றி பார்க்கிங் வசதியும் இருக்கிறது. இங்கு சிக்கன் பெப்பர் சூப், மட்டன் எழும்பு சூப், கிராப் மசாலா, சிக்கன் லாலிபாப், பிஷ் 65, கிராப் 65, வெங்காய பக்கோடா, கோபி 65 போன்ற ஸ்டார்டர்ஸ் வகைகள் உள்ளது.
மேலும், வெஜ் மற்றும் நான் வெஜ் மீல்ஸ், இட்லியும் நாட்டுக்கோலி குழம்பும், பரோட்டா மற்றும் நாட்டுகோலி குழம்பும் நிச்சயம் வாங்கி சாப்பிட வேண்டிய டிஷ். அசைவ வகைகள் மட்டுமில்லாமல் சைவ வகைகளும் அதே நேர்த்தியான சுவையில் கிடைக்கிறது. எனவே சிவகங்கையில் கண்டிப்பா இங்க சாப்பிட்டு பாருங்க.
அன்வாரியா ஃபுட் கார்னர்
அசைவ விரும்பிகள் சிவகங்கை சென்றால் நிச்சயம் இந்த கடையில் சாப்பிட மிஸ் பண்ணிடாதீங்க. இது அரன்மணை வாசலில் அமைந்துள்ளது. மிகவும் பேமஸான இந்த கடையில் இவர்களது பரோட்டாவும் கிட்டத்தட்ட 18 முதல் 24 வகையான குழம்ப்பு வகைகளும் தான்.
அதிலும் பரட்டாவுடன் நண்டு கிரேவி அதிக விரும்பி சாப்பிடும் காம்பினேஷனாக உள்ளது. நத்தை, மீன், நண்டு, இறால், சிக்கன், மட்டன் என அனைத்து வகையான அசைவங்களும் நேர்த்தியான சுவையில் கிடைக்கிறது.
அதுமட்டுமின்றி ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற வெரைட்டி சாப்பாடுகளும் கிடைக்கிறது. மாலை 6 மணி இரவு 11 மணி வரை இந்த கடை இயங்கும் என்று கூறப்படுகிறது.
கமரா உணவகம்
சிவகங்கையில் சைவ உணவு சாப்பிட நினைப்பவர்கள் உழவர் சந்தை அருகில் அமைந்துள்ள கமரா உணவகத்தை ட்ரை பண்ணுங்க. இங்கு கிடைக்கும் வெஜ் மீல்ஸ் மிகவும் சுவையாகவும் வீட்டு சமையலை நினைவூட்டும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சைவ வெரைட்டிகள் அனைத்துமே கிடைக்கும். இட்லி, தோசை, போன்ற டிபன் வெரைட்டிகள் முதல் தொடங்கி சைனீஸ், அரேபியன், சவுத் இந்தியன் என பல வகை உணவுகளும் கிடைக்கிறது. அசைவ உணவு சாப்பிட வேண்டும் என்றால் செட்டிநாடு கமரா உணவகத்தை ட்ரை செய்து பார்க்கலாம்.
10 ரூபாய் ஹோட்டல்
வெறும் 10 ரூபய்க்கு வயிறாரவும் சுவையாகவும் சாப்பிடலாம் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம் சிவகங்கை, கல்லல் பகுதியில் அமைந்துள்ளது இந்த பிச்சம்மை கேண்டீன். முற்றிலும் எழிய மக்களின் பசியை போக்கவும் வயிறு நிறைய சப்பிட வேண்டும் என்ற சேவை செய்யும் எண்னத்தில் தொடங்கப்பட்ட கேண்டீன் இது.
சோறு, குழம்ப்பு, பொரியல், துவையல் என முழு சாப்பாடும் நேர்த்தியான சுவையில் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி டிபன் வகைகளும் இங்கு கிடைக்கிறது. சுவையும், தரமும் சற்றும் குறையாமல் வாரம் தோறும் காலை,
மதியம், இரவு என மூன்று வேளையும் வெறும் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. கல்லல் பகுதி மக்களின் மிகவும் பிடித்தமான ஹோட்டலாகவும் இந்த பிச்சம்மை கேண்டீன் கருத்தப்படுகிறது.