சேலம் பக்கம் போறிங்களா? அப்போ இந்த உணவுகளை சாப்பிட மிஸ் பண்ணிடாதீங்க!
சேலம் மாவட்டம்
வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் சேலம் மாவட்டமும் ஒன்று. மலைகளால் சூழப்பட்டு காணப்படும் அதன் அழகே தனி தான். வரலாறு, பொழுது போக்கு, கலாச்சாரம், உணவு வகைகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் அனுபவிக்க சேலம் மாவட்டத்தில் தான் முடியும்.இதன் வனப்பு இயற்கை விரும்பிகளுக்கு ஒரு சொர்கம் என்றே சொல்லலாம் .
மாம்பழம், தட்டு வடை என்றாலே சேலம் தான் நினைவிற்கு வரும். அப்படி ஒரு நெருக்கம் உணவுக்கும் சேலம் மாவட்டத்துக்கும் உள்ளது. இங்கு உணவுகள் தனித்துவமான சுவையில் கிடைக்கும். அந்த வகையில் நீங்கள் சேலம் வந்தால் நாக்குக்கு ருசியா சாப்பிட ஒரு சில சிறந்த இடங்களை இந்த பதிவில் காணலாம்.
அசைவ உணவுகள்
சேலத்தில் வயிறார சாப்பிட சுவையான சில அசைவ உணவகங்களில் ஏரளமகா உள்ளது. அந்த வகையில், சேலம், ஆர்த்தி நகரில் அமைந்துள்ள "செல்வி மெஸ்" மிகவும் பிரபலமாக உள்ளது. இங்கு பரோட்டா நல்ல எண்ணையில் செய்யப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான உணவு வகைகள் நல்ல எண்ணையை பயன்படுத்தி தான் செய்கின்றனர். அங்கு கிடைக்கும், சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, பிரியாணி அனைத்தும் செம்ம சுவையாக இருக்கும்.
அடுத்ததாக "ரசிகாஸ் ரெஸ்டாரண்ட்" இது ஓமலூர் மெயின் ரோடு,அண்ணா பார்க் அருகில் அமைந்துள்ளது. இங்கு சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் கிடைக்கும்.குறிப்பாக ஹைதராபாத் போன் லேஸ் சிக்கன் இங்கு மிகவும் பிரபலமாம் கண்டிப்பாக சுவைத்து பாருங்கள். குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட ஒரு நல்ல உணவகம் இது.
விலை பொறுத்தவரை ஒருவருக்கு தலா ரூ.250 ஆகும். நல்ல கொங்கு சமையல் சாப்பிட சேலம் நியூ பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள "மங்கள விலாஸ்" ஒரு நல்ல உணவகமாகும். 15 வருட பழமை வாய்ந்த இங்கு அனைத்து விதமான சைவ வெரைட்டி உணவுகளும் ருசியாக விற்பனை செய்யப்படுகிறது.
கொத்து பரோட்டா, வஞ்சரம் ப்ரை, நாட்டு கோழி கால் ரோஸ்ட, மட்டன் பெப்பர் ப்ரை இன்னும் பல வகைகள் அங்கு மிக பேமஸ். சேலத்தில் உருவான ஒரு மிக பெரிய பிரியாணி கடை தான் "சேலம் RR பிரியாணி". இதன் கிளைகள் உலகெங்கும் பறந்து விரிந்து கிடக்கிறது. எனவே சேலம் சென்றால் நிச்சயம் அங்கு மறக்காமல் சென்று சாப்பிட்டு பாருங்கள்.
சைவ உணவுகள்
சேலத்தில் அசைவ உணவுகளுக்கு நிகராக சைவ உணவுகள் செம்ம சுவையாகவும், தரமாகவும் கிடைக்கும் அப்படிபட்ட ஹோட்டல்கள் இங்கு ஏராளமாக உள்ளது, அந்த வகையில், அங்கு மிகவும் பிரபலமான ஒரு சைவ உணவகம் தான் இந்த "ஸ்ரீ கிருஷ்ணா வெஜ் ரெஸ்டாரண்ட்".
பல வருட பழமை வாய்ந்த ஹோட்டலான இங்கு ரொம்போ ஸ்பெஷல் என்றால் அவர்களது டிபன் வெரைட்டி தான். இட்லி, தோசை,பூரி, நெய் ரவா தோசை,வெங்காய தோசை. போலி,பேப்பர் மசாலா ரோஸ்ட உள்ளிட்ட பல வகைகள் அங்கு பேமஸ் அதுமட்டுமின்றி அவர்களது சாம்பாரின் சுவைக்கு சேலமே அடிமை என்று சொல்லலாம்.
இங்கு மீல்ஸ் கிடைக்காது எனவே காலை மற்றும் இரவு வேளையில் டிபன் சாப்பிட வேண்டுமானால் இங்கு கண்டிப்பாக வரலாம். மத்திய வேளையில் நல்ல வெஜ் மீல்ஸ் சாப்பிட வேண்டுமென்றால், ஃபேர்லேண்ட்ஸ் கோயில் தெருவில் அமைந்துள்ள "ஸ்ரீ சாய் விஹார்" செல்லலாம்.
இங்கு வீட்டு சமையல் சுவையில், தரமான தமிழ் சாப்பாடு வகைகள் கிடைக்கிறது. இங்கு வெஜ் தாலி, காசி ஹல்வா, பிரியாணி ஆகியவற்றை மறக்காமல் சாப்பிட்டு பாருங்கள். இதை தவிற மற்ற உணவு வகைகளும் கிடைக்கிறது. அடுத்ததாக பட்ஜெட்குள் சாப்பிட சேலம் சங்கர் நகரில் உள்ள "க்ரிஷ்ணம்ருதம்" உணவகத்தை ட்ரை செய்து பாருங்கள்.
இங்கு விதவிதமான வெஜ் உணவுகள் கிடைக்கிறது.டிபன், மீல்ஸ் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இவர்களது பிசா தோசை,இஞ்சி சட்னி பெசரட்டு, தட்டு போடி இட்லி உள்ளிட்டவை அங்கு பேமஸ்.
ஸ்னாக்ஸ்
சேலம் என்றாலே நியாபகத்துக்கு வருவது அந்த தட்டு வடை தான். அதை சாப்பிட சேலம் 5 ரோடு பக்கம் சென்றால் ஒரு சின்ன தள்ளுவண்டியில் உங்களுக்கு தட்டு வடை செட் கிடைக்கும். விலை 10 ரூபாய் மட்டுமே. தட்டு வடை செட்டில், பல விதங்கள் கிடைக்கிறது, பூண்டு செட், தக்காளி செட்,முட்டை செட்,வெங்காய செட் பல வகைகள் இருக்கு..
சேலம் ஸ்பெஷல் தட்ட வடை செட் மறக்காம ருசித்து பாருங்க. அடுத்ததாக மாலை வேளையில் கொஞ்சம் ஸ்னாக்ஸ் வகைகள் சாப்பிட வேண்டுமானால், சேலம் ஓல்ட் பஸ் ஸ்டாண்ட் பக்கம் செல்லுங்கள்.
அங்கு மசாலா பூரி, நொறுக்கல், பொறி செட், போண்டா செட், பன் செட் மேலும் 60க்கும் மேலான தட்டு வடை செட்டுக்கள் 10 ரூபாயில் தொடங்கி 100 ரூபாய்க்குள் அனைத்தும் கிடைக்கும்.