நாக்குக்கு ருசியா நாமக்கல்லில் சாப்பிடனுமா? இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

Tamil nadu Namakkal
By Swetha Nov 28, 2024 11:30 AM GMT
Report

நாமக்கல்லில் சுவையான சாப்பாடு எங்கெல்லாம் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

நாமக்கல்

பரபரப்பான நகரமும்.. வசீகரிக்கும் கிராமிய அழகையும் அனுபவிக்கும் நகரங்களில் ஒன்று நாமக்கல். வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும் மனதில் மகிழ்ச்சி பொங்கவைக்கிறது.

நாக்குக்கு ருசியா நாமக்கல்லில் சாப்பிடனுமா? இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க! | Best Places To Eat In Namakkal

மருத்துவ மூலிகைகள் மற்றும் தாவரங்களுக்கு பெயர் பெற்ற கொல்லிமலை மலையில் சுத்தமான காற்றை சுவாசிக்க ஒவ்வொருவருகும் ஆசை இருக்கும். இப்பேரு பெற்ற அழகான நாமக்கல்லில் சாப்பாட்டின் சுவைக்கும் பஞ்சம் இருக்குமா? எனவே,

நாமக்கல் மாவட்டம் சென்றால் எங்கெல்லாம் சுவையான சாப்பாட்டை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

அண்ணாமலை ஹோட்டல்

அண்ணாமலை ஹோட்டலில் கிடைக்கும் பரோட்டா மற்றும் குழம்பு நாமக்கல்லில் ரொம்போ ஃபேமஸ், அதிலும் அதிக பேர் விரும்பி சாப்பிடும் சிக்கன் சுக்காவின் சுவை அசத்தும். பஞ்சு போன்ற பன் பரோட்டா மற்றும் பரோட்டாவுக்கு, சிக்கன்,

நாக்குக்கு ருசியா நாமக்கல்லில் சாப்பிடனுமா? இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க! | Best Places To Eat In Namakkal

ப்ரை, நாட்டுக்கோழி கிரேவி, சுக்கா கிரேவியை தொட்டு சாப்பிட்டால் பிறவி பலனை அடைந்ததுப்போல் இருக்குமாம். பல வகையான கிரேவிகளும், சைட் டிஷ்களும் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி கண்டிப்பா ட்ரை பண்ண வேண்டியது கலக்கி,

காட ப்ரை, புறா ஃப்ரை, தலக் கறி அகியவை அதிக பேர் விரும்பி வாங்கி சாப்பிடும் டிஷ்ஷாக உள்ளது. எனவே பரோட்ட விரும்பிகள் தண்ணி குழம்பு, கெட்டி குழம்புடன் உற்றி ருசித்து சாப்பிட இந்த கடையை ட்ரைப் பண்ணுங்க. 

நாமக்கல் வாத்துக் கடை

 நாமக்கல்லில் நல்ல ஒரு மட்டன் பிரியாணி சாப்பிட நினைத்தால் திருச்சங்கோடு சாலையில் அமைந்துள்ள இந்த வாத்து கடைக்கு செல்லுங்கள். இவர்களது மட்டன் பிரியாணி மற்றும் வாத்து கறி பலரது விருப்பான டிஷ்ஷாக இருக்கு.

நாக்குக்கு ருசியா நாமக்கல்லில் சாப்பிடனுமா? இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க! | Best Places To Eat In Namakkal

இங்கு கிடைக்கும் இட்லி வாத்து கறி காம்பினேஷனுக்கு பலர் அடிமையாம். இங்கு வாத்து மட்டுமின்றி கோழி, ஆடு முட்டை என இன்னும் பல வெரைட்டிகள் இருக்கு. மறக்காமல் இங்கு மிளகு முட்டையை சாப்பிட்டு பாருங்க. வாத்து கறி விரும்பிகளுக்கு இந்த கடை மிகவும் விருப்பான ஒன்றான மாறிவிடும்.

ஹோட்டல் செல்லப்பா

 நாமக்கல்லில் சாப்பாட்டில் பரோட்டா தான் ரொம்போ ஃபேமஸ் ஆனால் இந்த கடையில் இவர்களது குழம்பு மற்றும் கிரேவி வகைகள்தான் அந்த பரோட்டாவுக்கே ஃபேமஸ் என்கிறார்கள். இந்த ஹோட்டல் பரமதி ரோடு ஆவின் ஆபிஸ் அருகில் அமைந்துள்ளது.

நாக்குக்கு ருசியா நாமக்கல்லில் சாப்பிடனுமா? இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க! | Best Places To Eat In Namakkal

இங்கு மதியான வேளையில், அசைவ மீல்ஸ் கிடைக்கும் அதேபோல சிக்கன், மட்டன், காடை, நாட்டு கோழி, முயல், முட்டை, என பல வகை கறி வருவல்கள் கிடைக்கிறது. எனினும் இங்க ஃபேமஸ் கிரேவிதான் அதுவும் பரோட்டாவுக்கு தரப்படும் கெட்டி குழம்பின் சுவை அசத்தலாக இருக்குமாம்.

மேலும் கிழி பரோட்டா, பன் பரோட்டா, வீச்சு, கொத்து என பல வகை பரோட்டாவும் இருக்கிறது. எனவே அசைவ விரும்பிகள் கண்டிப்ப இந்த கடையில் சாப்பிட மிஸ் பண்ணிடாதீங்க.

டேபள் டிரீ ரெஸ்டாரண்ட்

நாமக்கல் மதுரை வீரன் புதூர் ரோட்டில் அமைந்துள்ளது. குடும்பங்களுடன் சென்று நல்ல சாப்பாட்டுடன் சேர்ந்து நேரத்தை செலவிட டேபள் டிரீ ரெஸ்டாரண்ட சிறந்த இடமாக உள்ளது. இங்கு ரெமோ படத்தில் வருவதைப்போல சீட்டிங் பலரை ஈர்த்துள்ளது.

நாக்குக்கு ருசியா நாமக்கல்லில் சாப்பிடனுமா? இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க! | Best Places To Eat In Namakkal

அதுமட்டுமின்றி இங்கு பல வெரைட்டி உணவுகள் உள்ளது. சைனீஸ், அரேபியன், சவுத் இந்தியன், நார்த் இந்தியன் என வித விதமான டிஷ்கள் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும், ரேஷ்மி கேபாப், மட்டன் மசாலா, டிராகன் சிக்கன், க்ரில், பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் ஆகியவை அங்கு ரொம்பவே ஃபேமஸ்.

இங்கு சைவம் மற்றும் அசைவ உணவும் கிடைக்கிறது. எனவே நிச்சயம் இந்த உனவகத்தை ட்ரை செய்து பார்க்கலாம்.

 சிபோ எக்ஸ்பிரஸ்

இந்த ரெஸ்டாரண்டில் அனைத்து விதமான உணவுகளும் இருக்கிறது. அதாவது, பிரியாணி, ஃப்ரைட் ரைஸ், சூப், தந்தூரி, கேபாப், சைனீஸ் டிஷ், சாண்ட்விச், பர்கர், பாஸ்தா, மில்க் ஷேக்ஸ், டிசர்ட்ஸ், என பல வகை உணவுகளும் இருக்கிறது.

நாக்குக்கு ருசியா நாமக்கல்லில் சாப்பிடனுமா? இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க! | Best Places To Eat In Namakkal

எனவே குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சென்று சாப்பிட இரு உகந்த இடமாக இருக்கிறது. இந்த ரெஸ்டாரண்ட் பரமதி ரோட்டில் அமைந்துள்ளது. சுவைகேற்ற விலையில்தான் உணவுகள் இருக்கும்.