இதெல்லாம்தான் நாகப்பட்டினத்தின் ஃபேமஸ் ஃபுட்.. அங்க போனா இதை மிஸ் பன்னிடாதீங்க!
நாகப்பட்டினத்தில் உள்ள ஃபேமஸான சாப்பாடு இடங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நாகப்பட்டினம்
தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தலம் நாகப்பட்டினம். சூரிய கதிர் முத்தமிடும் அழகிய கடற்கரைகள், நம்பிக்கையான புனித வழிபாட்டு தலங்கள், மகிழ்ச்சி தரும் நகரம், அன்பான மக்கள் என அனைத்திலும் சிறந்து விளங்கும் மாவட்டம்தான் நாகை.
வாழ்வில் ஒரு முறையாவது வேளாங்கண்ணி, நாகூர் தர்கா ஆகிய இடங்களுக்கு சென்று ஆசிப்பெற்று வர வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் இருக்கும்.
இப்படி செழுமையான ஒரு நகரில் ருசியான சாப்பாட்டுக்கு குறை இருக்குமா என்ன? அப்படி நீங்கள் இங்கு கண்டிப்பா சாப்பிட மிஸ் செய்யக்கூடாத இடங்களை பற்றி பார்க்கலாம்.
நாகூர் ரஹ்மனியா (பாபா பாய்) ஹோட்டல்
90 ஆண்டு பழமையான இந்த ஹோட்டல் நாகூர் தர்காவிற்கு மிக அருகில் அமைந்துள்ளது. நாகூரில் உள்ள பெரும்பாலன மக்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் என்று சொல்லப்படுகிறது. இங்கு கிடைக்கும் கொத்து பரோட்டா தான் ரொம்பவே ஃபேமஸ்.
ஏனேன்றால் இவர்கள் அதை செய்யும் விதம் மிகவும் வித்தியாசமாக இருக்குமாம். அதுமாட்டுமின்றி வெளியூரில் இருந்து வந்தால் கண்டிப்பா இதை கேட்டு வாங்கி சப்பிட்டு தான் செல்வார்களாம்.
அடுத்து இவர்களது பரோட்டா பாயா ட்ரை செய்ய வேண்டிய ஒரு டிஷாகும். பாயா விரும்பிகளுக்கு இந்த இடம் ரொம்பவே பிடிக்கும்.சாப்பாட்டின் விலையும் சுவைக்கு ஏற்றதுபோல் இருக்கும் எனவே அசைவ விரும்பிகள் இந்த இடத்தை மிஸ் பன்னிடாதீங்க.
நாகூர் ஹாஸிம் கேட்டரிங் (பெட்டி & சட்டி சோறு)
நாகப்பட்டினத்தில் மிகவும் ஃபேமஸான சப்பாடுகளில் ஒன்றுதான் இந்த பெட்டி சோறு மற்றும் சட்டி சோறு. இந்த கடை நாகூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இது இவர்களின் பாரம்பரிய டிஷ் என்று கூறப்படுகிறது. இங்கு கிடைக்கும் இவர்களது பெட்டி சோறு என்னவென்றால்,
ஒரு பெட்டியில் நெய் சோறு, தால்ச்சா, சிக்கன் கிரேவி என மூன்றையும் லேயராக வைத்து தரப்படுகிறது. அதேபோலதான் சட்டி சோறும், ஒரு சட்டியில் அதே சிக்கன் கிரேவி மற்றும் நெய் சோறுடன் தரப்படுகிறது. இதன் நேர்த்தியான சுவை ஏராளமான மக்களை ஈர்த்துள்ளது எனலாம்.
இங்கு கிடைக்கும் மந்தி பிரியாணிக்கூட ட்ரை பன்ன வேண்டிய டிஷ்தான். எனவே எதாவது வித்தியாசமாகவும் , நாகூரின் பாரம்பரிய சாப்பாட்டையும் ருசிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் இந்த இடத்தை ட்ரை பன்னுங்க. குடும்பத்துடன் வருவோர்க்கு இங்கு ஏசி மற்றும் நான் - ஏசி சீட்டிங் வசதி இருக்கிறது.
செட்டிநாடு ஹோட்டல்
இந்த செட்டிநாடு ஹோட்டல், நேதாஜி ரொடு, ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் அமைந்துள்ளது. இங்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் அனைத்தும் கிடைக்கும். அதுமட்டுமின்றி இந்த ஹோட்டலில் ஏசி மற்றும் நான் - ஏசி என இரண்டு சீட்டிங் வசதியும் உள்ளதால் குடும்பத்துடன் போக நல்ல இடமாகும்.
இவர்களிடத்தில் நேர்த்தியான சுவையில் தரமான சாப்பாடு கிடைக்கிறது. சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி, டந்தூரி சிக்கன், கிரில், ஹனி சிக்கன், எக் மீல்ஸ், சீர் ஃபிஷ் ப்ரை, சாப்பாடு மீன் குழம்பு, பரோட்டா சால்னா,
செட்டிநாடு சிக்கன், கலக்கி, கொத்துப்பரோட்டா, பிரான் ஃப்ரை போன்ற அசைவ உணவுகளும் இட்லி, தோசை வெரைட்டி, வெஜ் நூடில்ஸ், ஃப்ரைட் ரைஸ், வெஜ் சூப் என பல வகைகள் கிடைக்கிறது.
ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்
நாகூர் வாடா
நாகப்பட்டினத்தின் ஃபேமஸான ஸ்ட்ரீட் ஃபுட்ஸில் ஒன்று இந்த வாடா. இது நாகூர் தர்காவிற்கு எதிரில் அமைந்துள்ள சின்ன தள்ளு வண்டி கடையில் கிடைக்கிறது. இவர்களிடம் கிடைக்கும் இறால் வாடா நாகூர் மக்களின் பிடித்தமான ஸ்நாக்ஸாக இடம்பிடித்துள்ளது.
நல்ல சுட சுட எண்ணையில் பொரித்து தரும் இந்த வாடாவின் சுவை வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளையும் ஈர்த்துள்ளது எனலாம்.
தவா பீஃப் பிரட்
பர்கர் எப்படி பலருக்கு பிடித்தமான ஒன்றோ அதைப்போலவே இருக்கும் இந்த தவா பீஃப் பிரட் பலருக்கு பிடிக்கும். வெறும் 30 ரூபய்க்கு கிடைக்கும் இதை பலர் தேடி தேடி சென்று வாங்கி உண்ணுகின்றனர்.
இரண்டு பிரடுக்குள் தவா கறியை வைத்து மயோனைஸ் ஊற்றி தருகின்றனர். இது தர்காவின் சாலையோரம் உள்ள குட்டி வண்டியில் விற்கப்படுகிறது.
நாகூர் ரபீக் ஸ்வீட் ஸ்டால்
காலமாட்டுவாசலில் அமைந்துள்ள இந்த கடையில் நாகூரின் அனைத்து ஃபேமஸ் ஸ்வீட்களும் கிடைக்கும். அதாவது குலாப் ஜாமுன், தம் கா ரூட் ஹல்வா, பால்கோவா, கலர் பூந்தி ஆகிய ஸ்வீட்களை நிச்சயமா டேஸ்ட் செய்யாமல் இருக்காதீங்க.
இவர்கள் இலவசமாக மந்தார இலையில் சாம்ப்பள் தருகிறார்கள். அதனால் சாப்பிட்டு பார்த்து பிடித்ததை வாங்கிகொள்ளலாம்.