கிருஷ்ணகிரி போறீங்களா.. சுவையான விருந்தை எங்கெல்லாம் சாப்பிடலாம்.. தெரிஞ்சிகோங்க!
கிருஷ்ணகிரி எங்கெல்லாம் சுவையான சாப்பாடு சாப்பிடலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.
கிருஷ்ணகிரி
ஒரே பயணத்தில்.. பல்வேறு அனுபவங்களை பெற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்.. கிருஷ்ணகிரி மாவட்டம்தான் சிறந்த இடமாகும். மகிழ்ச்சிகளையும் நினைவுகளையும் ஒன்றாக வழங்கும் நிலப்பரப்பு இதுதான். கிருஷ்ணகிரி என்ற வார்த்தை கருப்பு மலை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் அதன் கருப்பு கிரானைட் படிவுகளிலிருந்து இப்பெயர் பெற்றது. இந்த மாவட்டத்தில் உள்ள கோட்டையின் பண்டைய பேரழகை அனுபவிக்கலாம். ஆன்மீக அனுபவத்தை உணரவும், ரசிக்கவும் பல அற்புதமான கோயில்கள் உள்ளன.
இயற்கை எழில் கொஞ்சும் மலைத்தொடரின் மெய்சிலிர்க்க வைக்கும் அழகு என அனைத்திலும் சிறந்த இடமாக உள்ளது கிருஷ்ணகிரி. இப்படிப்பட்ட அழகான ஒரு ஊரில் ருசியான சாப்பாடு கிடைக்காமல் இருக்குமா? எனவே கிருஷ்ணகிரியில் சுவையான உணவை எங்கெல்லாம் சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
ஸ்ரீ ஜெயா விலாஸ்
கிருஷ்ணகிரி, ராயகோட்டை சாலையில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீ ஜெயா விலாஸ். இங்கு இந்த ஹோட்டல் மிகவும் ஃபேமஸாம். பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த ஹோட்டல் குடும்பத்துடன் சென்று சாப்பிட உகந்த இடமாகும். தாரளமான பார்க்கிங் வசதி உள்ளது.
காலை 11மணி முதல் தொடங்கி இரவு 11 மணி வரை இயங்குகிறது. சைவம் மற்றும் அசைவம் என பல விதமான உணவுகள் வழங்கப்படுகிறது. இங்கு சவுத் இந்தியன், நார்த் இந்தியன், சைனீஸ், அரேபியன் என பல வெரைட்டிகள் இருக்கிறது. இவர்களிடத்தில், மட்டன் பிரியாணி.
வாழையிலை பரோட்டா, வாழையிலை சிக்கன் சுக்கா, மீன், நண்டு வறுவன், சிக்கன் வடியல், ரேஷ்மி டிக்கா, நாட்டுக்கோழி கிரேவி, மின் சம்பல், நெய் மட்டன் சுக்கா என பல ஸ்பெஷல் உணவுகள் கிடைக்கிறது.
ஹோட்டல் மங்களம்
கிருஷ்ணகிரியில் பஸ் ஸ்டாண்ட் போகும் வழியில் அமைந்துள்ளது இந்த ஹோட்டல் மங்களம். ரொம்பவே ஃபேமஸான இந்த ஹோட்டலில் கிடைக்கும் இவர்களது சிக்கன் பிரியாணி பெயர்போனது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் கிடைக்கிறது.
தரமான சுவையில், பல வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. பார்க்கிங், ஏசி, நான்- ஏசி சீட்டிங் வசதி உள்ளதி. இவர்களிடத்தில் கிடைக்கும், மட்டன் பிரியணி, மட்டன் நள்ளி ஃப்ரை, சிக்கன் தந்தூரி பலர் விரும்பு உண்ணும் உணவாக உள்ளது.
இது மட்டுமல்லாமல், சவுத் இந்தியன், நார்த் இந்தியன், சைனீஸ், போன்ற பல வகை உணவுகளும் உள்ளது. எனவே குடும்பத்துடன் சென்று சாப்பிட இது ஒரு உகந்த இடம்.
ஹோட்டல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா
சைவ ஹோட்டலான இது ஹைவேயில் அமைந்துள்ளது. நெடுந்தூரம் பயணிப்பவர்களுக்கு இது ஒரு உகந்த இடம். விசாலமான பார்க்கிங் உடன் அமைந்திருக்கு இந்த ஹோட்டலில், பாரம்பரிய உணவுகள் தொடங்கி சிற்றுண்டி, ஸ்நாக்ஸ், டீ, காபி என பல வித உணவுகள் கிடைக்கிறது.
மில்லட் வகைகளான கம்பு, கேழ்வரகு, ராகி, குதிரவாலி ஆகியவற்றில் போலி, அடை, முறுக்கு, பணியாரம் என அனைத்தும் சுவையில் அசத்திவிடுமாம். அதுமட்டுமின்றி சுவீட் வகைகள் பலவையும் இருக்கிறது. எனவே சாயுங்காலம் குடும்பத்துடன் சென்று ஆரோக்கியமாகவும் சுவையாகவும் சாப்பிட இது ஒரு சிறந்த இடமாகும்.
விருந்தவன் உணவகம்
இந்த சைவ உணவகம் கிருஷ்ணகிரி பிஆர்சி ஸ்கூல் ரொட்டில் அமைந்துள்ளது. நல்ல ஒரு வீட்டு சமையல் சாப்பிட நினைத்தால் நிச்சயம் இந்த இடத்தை ட்ரை பண்ணலாம். மதியம் 1 மணிக்குள் சென்றால் கூட்ட சற்று குறைவாக இருக்குமாம். இங்கு பலதரப்பட சைவ உணவுகள் கிடைக்கிறது.
பாரம்பரிய சிறுதனிய உணவுகள், டிபன் வகைகள், மீல்ஸ் என சிறந்த சுவையில் தரமாக கிடைக்கிறத். உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை நியாமான விலையில் சாப்பிட இது ஒரு உகந்த இடமாகும். அதுமட்டுமின்றி முழுக்க முழுக்க தானியங்களால் ஆன பலகாரஙகளும் கிடைக்கிறது.