கரூர் மாவட்டத்தை கலக்கும் ஃபேமஸ் ஃபுட்.. இங்க வாய்க்கு ருசியா சாப்பிடலாம்!
கரூர் மாவட்டத்தில் உள்ள பேமஸ் ஆன உணவு மற்றும் ஹோட்டல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கரூர் என்ற பெயரை எங்கேயாவது பார்த்ததுண்டா.. நன்றாக சிந்தித்து பாருங்கள்.. பேருந்தின் ஏதோ ஒரு மூலையில் சிறிய அளவில் கரூர் என்று எழுதியிருப்பார்கள். ஆம். இந்தியாவின் அதிக அளவு பேருந்து உற்பத்தி கரூர் மாவட்டத்தில்தான் நடைபெறுகிறது.
மரக்கூழ் பயன்படுத்தாமல் தாள் தயாரிக்கும் தொழிற்சாலை இந்தியாவிலேயே முதன்முதலில் கரூரில் தொடங்கப்பட்டது.அதுமட்டுமில்லாமல் கரூர் மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள் அதிகம். இத்தனை சிறப்பு மிக்க கரூருக்கு வரும் நீங்கள் இங்கு கண்டிப்பா சாப்பிட மிஸ் செய்யக்கூடாத இடங்களை பற்றி பார்க்கலாம்.
திண்டுக்கல் வேலு பிரியாணி
கரூர் மாவட்டத்தில் வையாபுரி நகரில் திண்டுக்கல் வேலு பிரியாணி உணவகம் அமைந்துள்ளது. மதியம் 12:00 மணிக்கு முதல் இரவு 10:30 மணி வரை இயங்கும். குழுவாக அமர்ந்து சாப்பிடும் வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், விசாலமான பார்க்கிங் வசதியுடன் அமைந்துள்ளது.
இந்த உணவகத்தில் மட்டன் பிரியாணியில் 21 வகை பரிமாறப்படுகிறது.அதுமட்டுமின்றி சிக்கன், மட்டன், இறால் பிரியாணி தொடங்கி கிரில், தந்தூரி என அனைத்து வகையான அசைவ உணவுகளும் கிடைக்கும். கூடுதலாக ஷவர்மா, சூப், ஐஸ் கிரீம் ஆகியவையும் கிடைக்கும்.
ஸ்ரீ சக்தி மெஸ்
கரூரில் ஸ்ரீ சக்தி மெஸ் ஒரு இனிமையான இரவு உணவிற்கு ஏற்றது. சைவ உணவு பிரியர்கள் கட்டாயம் சாப்பிட்டு பார்க்க வேண்டிய இடமாக உள்ளது. ருசியான மற்றும் மலிவான விலையில் உணவைத் தேடும் நபர்களுக்கு இது சிறந்தது.
இந்த உணவகத்தில் டிபனில் இட்லியில் துவங்கி தோசை, உப்மா என நீளும் பட்டியலில், கலந்த உணவுகளும் மினி மீல்ஸ்'ஸும் சுட சுட பரிமாறுகிறார்கள்.அதுமட்டுமில்லாமல் மீல்ஸ்க்கு அதிலும் பருப்புக்குழம்பு, சாம்பார், வத்தக்குழம்பு, கீரைக்குழம்பு, மோர்க்குழம்பு எனப் பல வகைகள் பரிமாறுகிறார்கள்.
வண்டிக்கடை உணவகம்
கரூரில் நாம் அடுத்தபடியாக பார்க்க இருப்பது வண்டிக்கடை உணவகம். இந்த உணவகத்துக்கு பெயரும் டிப்ரெண்ட் தான். இந்த உணவகம் இரவு 7 மணி முதல் 11 மணி வரை திறக்கப்பட்டு இருக்கும் இது திருச்சி தேசிய நெடுந்சாலையில் உள்ள ஜவஹர் பஜார் பட்டாபிராமன் ஆட்டோ மொபைல் கடைக்கு பகுதிக்கு அருகில் உள்ளது.
நைஸ் தோசை கல் தோசை பொடி தோசை ஆனியன் தோசை உள்ளிட்ட வேளையில் தொடங்கி பரோட்டா நூல் பரோட்டா முட்டை பரோட்டா நான் வெஜ் கொத்து பரோட்டா வெஜ் கொத்து பரோட்டா கோதுமை பரோட்டா என பல வகைகள் பரிமாறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளான பணியாரம் குழிப்பணியாரம் முட்டை பணியாரம் உள்ளிட்டவைகளும் இங்கு கிடைக்கிறது.
Kokkarako Biriyani
இந்த கொக்கரகோ பிரியாணி உணவகம் ஈ .பி ஆபீஸ் ,கோவை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த உணவகம் காலை 11 மணிக்கு தொடங்கி 11 மணி வரை செயல்படும்.இங்கு சிக்கன் , மட்டன் , இறால் , நண்டு ,என அனைத்து விதமான உணவுகள் பரிமாறப்படுகிறது.
மேலும் சுவையாகவும் சுகாதார முறையில் செய்யப்படுகிறது .பொதுவாக இந்த கொக்கரகோ பிரியாணி உணவகம் மக்களை கவர முழுவதும் ஏசியால் கவரப்பட்டு இருக்கும்.மேலும் மாலை வேளைகளில் சைனிஸ் உணவு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.