கள்ளக்குறிச்சியில் சுவையான சாப்பாடு... இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!
கள்ளக்குறிச்சியில் சுவையான சாப்பாடு எங்கெல்லாம் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கள்ளக்குறிச்சி பகுதி முழுவதும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் மணிமுக்தா, கோமுகி அணை உள்ளது. இந்த பகுதியில் நெல், கரும்பு, மக்காச்சோளம், மஞ்சள், பருத்தி, கம்பு, உளுந்து ஆகியவற்றை பயிரிடுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சுற்றுலாதளங்கள் மற்றும் கோவில்கள் அதிக அளவில் உள்ளது. இப்பேரு பெற்ற அழகான கள்ளகுறிச்சிக்கு சென்றால் எங்கெல்லாம் சுவையான சாப்பாட்டை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
மன்னா மெஸ்
கள்ளக்குறிச்சிசெல்லும் வழியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை தென்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது மன்னா மெஸ் உணவகம். இது சைவம் மற்றும் அசைவ உணவகம் ஆகும். இந்த உணவகம் மதியம் 12 மணிக்கு தொடங்கி 11 மணி வரை செயல்படுகிறது.
இங்கு கிராமத்து ஸ்டைலில் நாட்டுகோழி குழம்பு, நெய் சோறு, கருவாடு தொக்கு, மட்டன் சுக்கா, மீன் வறுவல், தொடங்கி முட்டை வரை வேரைட்டிகள் நாக்கில் எச்சி ஊறும். இங்கு பிராய்லர் கோழி ,பிராய்லர் முட்டை பயன்படுத்துவது கிடையாது. விலையும் தரத்திற்கு ஏற்ற்வாறு உள்ளது.
அ RESTAURANT
கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் அமைந்துள்ளது அ RESTAURANT.இது மற்ற உணவகம் போல் அல்லாமல் அனைவரையும் கவரக்கூடிய வகையில் உள்ளது.
இங்கு சிக்கன் சாண்ட்விச்,சீஸ் பர்கர், Fried Chicken,Cheese Pizza,சிக்கன் Fries,Milkshake, மோமோஸ் பிரெண்ஸ் Fries உள்ளிட்ட ஐட்டம்ஸ் உள்ளது. இங்கு நண்பர்களுடன் சென்றால் புது அனுபவமாக இருக்கும். இந்த கடை காலை 10 மனிக்கு தொடங்கி இரவு 11 மணிவரை செயல்படும்.
ஸ்ரீ தேவி மெஸ்
கள்ளக்குறிச்சி கவரைதெருவில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீ தேவி மெஸ். இந்த உணவகம் வீட்டில் நடத்தபட்டுகிறது. ஸ்ரீ தேவி மெஸ் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு11 .30 வரை செயல்படுகிறது.
இந்த உணவகத்தின் சிறப்பு இங்கு பறிமாறப்படும் மீன் குழம்பு தான். இதற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. குடும்பத்துடன் வந்து சாப்பிட ஏற்ற இடமாகும் . மறக்காமல் ட்ரை பண்ணுங்க.
ஹோட்டல் கரிகாலன்
ஹோட்டல் கரிகாலன் சேலம் பை பாஸ் சாலையில் கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ளது அசைவ உணவகம். இது வட இந்திய, தென்னிந்திய, சீன மற்றும் கான்டினென்டல் உணவு வகைகளில் இருந்து பல்வேறு வகையான உணவுகளை வழங்குகிறது.
இந்த உணவகத்தில் குடும்பத்தாருடன் அமரக்கூடிய வகையில் நல்ல இருக்கை வசதியும், நடமாடுவதற்கும் போதுமான இடவசதியும் உள்ளது. சில்லி சிக்கன், சிக்கன் லாலிபாப், சிக்கன் டிக்கா, தந்தூரி பரோட்டா, குல்சா உணவில் தொடங்கி மீன் பிரியாணி , வெஜ் பிரியாணி மற்றும் பருப்பு சாதம் வரை பரிமாறப்படுகிறது.
உணவக ஊழியர்கள் நட்பு மற்றும் மரியாதைக்குரியவர்கள் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களும் சிறந்த உணவு அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்கிறார்கள்.