ஈரோடு போறிங்களா? மண் மனம் மாறாத கொங்கு சமையல் சாப்பிட..இதை தெரிஞ்சிகோங்க!

Erode
By Swetha Jun 17, 2024 04:30 PM GMT
Report

ஈரோடு தமிழ்நாட்டின் மஞ்சள் மற்றும் ஜவுளியின் சொந்த நகரமாக கருதப்படுகிறது.

ஈரோடு  

அழகான நீர்நிலைகள், கோவில்கள்,அணைகள் மற்றும் மலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடம் சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப்படுகிறது.

ஈரோடு போறிங்களா? மண் மனம் மாறாத கொங்கு சமையல் சாப்பிட..இதை தெரிஞ்சிகோங்க! | Best Places To Eat In Erode

வரலாற்றையும் செழுமையான பாரம்பரியத்தையும் பறைசாற்றும் இந்த ஈரோடு மாவட்டதுக்கு நிகர் வேறெதுவும் இருக்காது.

இவ்வளவு அழகான இந்த ஊரில் சாப்பாடை பற்றி சொல்லவா வேண்டும்..நல்ல நாக்குக்கு ருசியா கொங்கு நாட்டு விருந்தை சாப்பிட ஈரோட்டில் சில சிறந்த இடங்களை இந்த பதிவில் காணலாம்.

அசைவ உணவுகள்

ஐயப்பா விலாஸ்

இந்த உணவகம் ஈரோடு, பெருந்துறை காங்கேயம் ரோடு பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ளது. 65 வருடம் பழமை வாய்ந்த இந்த ஹோட்டலில் இன்றளவிலும் சுவை மாறாமல் அதே நேர்த்தியான உணவுகள் கிடைக்கிறது. உயர்தர அசைவ உணவுகள் மட்டுமே இங்கு இருக்கிறது.

ஈரோடு போறிங்களா? மண் மனம் மாறாத கொங்கு சமையல் சாப்பிட..இதை தெரிஞ்சிகோங்க! | Best Places To Eat In Erode

இங்கு கிடைக்கும் மட்டன் சாப்ஸ், நாட்டுக்கோழி சாப்ஸ்,குடல்,சுக்கா பிரியாணி ஆகிய உணவு வெரைட்டிகள் அங்கு ரொம்பவே பிரபலம். எனவே ஈரோடு பக்கம் போனால் இங்கு சாப்பிட்டு பாருங்கள்.

கொங்கு பரோட்டா ஸ்டால்

ஈரோடு பரோட்டாவுக்கு ஒரு தனி ருசியே இருக்கும் அதுவும் இடையன்காட்டுவலசு, பெருந்துறை ரோட்டில் அமைந்துள்ள கொங்கு பரோட்டா ஸ்டாலில் கிடைக்கும் பரோட்டாவுக்கு ஈரோடே அடிமை என்று சொல்லலாம். இங்கு நல்ல மெத்து மெத்து பரோட்டாவும் அதற்கு கொடுக்கும் க்ரேவியும் சரியான சுவையில் இருக்கும்.

ஈரோடு போறிங்களா? மண் மனம் மாறாத கொங்கு சமையல் சாப்பிட..இதை தெரிஞ்சிகோங்க! | Best Places To Eat In Erode

பரோட்டா மட்டுமல்லாமல் இங்கு பள்ளிபாளையம் சிக்கன்,லாலிபாப்,சில்லி சிக்கன்,மட்டன் கொத்து கரி, வீச்சு பரோட்டா, பெப்பர் சிக்கன் மசாலா போன்ற பல வகைகள் அங்கு உண்டு. இவை அனைத்தும் சிறந்தா சுவையில் நீங்கள் ருசித்து பார்க்கலாம்.

தோட்டத்து விருந்து

ஈரோட்டில் இப்போது கலக்கி கொண்டு இருக்கும் உணவகம் தான் இந்த தோட்டத்து விருந்து ரெஸ்டாரண்ட். இது வில்லரசம்பட்டி ரோடில் அமைந்திருக்கிறது. இங்கு இவர்கள் தரம் மற்றும் சுவை மாறாத கொங்கு நாடு சமையலை செய்து வியக்க வைத்து வருகின்றனர். இவர்களது அசைவ மீல்ஸ் அங்கு ரொம்போ பேமஸ்.

ஈரோடு போறிங்களா? மண் மனம் மாறாத கொங்கு சமையல் சாப்பிட..இதை தெரிஞ்சிகோங்க! | Best Places To Eat In Erode

அதுமட்டுமல்லாமல், TVS (தோட்டத்து விருந்து ஸ்பெஷல் நாட்டுக்கோழி),மட்டன் சுக்கா, மட்டன் லிவர், செவரொட்டி, மூளை ப்ரை, பிச்சிப்போட்ட சிக்கன், பச்சை புளி ரசம்,தல கறி இன்னும் பல பல வகை உணவுகளும் அங்கு கிடைக்கும். ஈரோடு சென்றால் மறக்காமல் குடும்பத்தோடு அங்கு சென்று சாப்பிட்டு பாருங்க. 

சைவ உணவுகள்

ஈரோட்டில் அசைவத்துக்கு நிகராக சைவமும் தரமான சுவையில், பல விதமான உணவுகள் விற்கப்படுகிறது. அப்படியாக சைவ சாப்பாடு ருசிக்க சில சிறந்த இடங்கள் இதோ,

திருச்சி கபே

இடையன்காட்டுவலசு, மேட்டூர் ரோட்டில் அமைந்திருக்கும் இந்த உணவகத்தில், இட்லி, தோசை வகைகள், பொங்கல்,சப்பாத்தி போன்ற டிபன் வகைகளும், சைவ மீல்ஸ் ரூ.100 க்கு அன்லிமிடெடாகவும் கிடைக்கிறது.

ஈரோடு போறிங்களா? மண் மனம் மாறாத கொங்கு சமையல் சாப்பிட..இதை தெரிஞ்சிகோங்க! | Best Places To Eat In Erode

இங்கு தென்னிந்திய உணவுகள் மட்டுமல்லாமல் வடஇந்திய உணவு வகைகளும் விற்கப்படுகிறது. எனவே ஈரோடு சென்றால், இந்த உணவகத்தை ட்ரை பண்ணி பாருங்க.

நளன் ரெஸ்டாரண்ட்

 எப்போதுமே ஒரே மாதிரி சாப்பிட்ட உங்களுக்கு சற்று வித்தியாசமாகவும் ஆரோகோயாமாகவும் சாப்பிடனும் நினைத்தால் KMCH multi specialty hospital எதிரில் அமைந்துள்ள நளன் உணவகத்தை ட்ரை செய்யுங்கள். இங்கு ஆர்கானிக்கான முறையில், இயற்கையான உணவுகள் மிகவும் சுவையாக வழங்கப்படுகிறது.

ஈரோடு போறிங்களா? மண் மனம் மாறாத கொங்கு சமையல் சாப்பிட..இதை தெரிஞ்சிகோங்க! | Best Places To Eat In Erode

இவர்கள் ஆரோக்கியத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இவர்களது கடைக்கு சென்றாலே தெரியும். இங்கு, தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளே அதிகம் அதிலும் வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு ஒரு வெரைட்டி உணவுகள் வழங்கப்படுகிறது.

உதாரணத்திற்கு, குதிரைவாலி ஆடை, தக்காளி ஊத்தாப்பம், சுட்ட ஆப்பம், கீரை கூட்டும், வல்லாரை ரசம்,வாழை பூ வடை போன்ற பாரம்பரிய உணவு வகைகள் கிடைக்கிறது.எனவே ஈரோடு போனால் நிச்சயம் இங்கு போக மறக்காதீங்க.

ஸ்ரீ கிருஷ்ணா பவன்

 ஈரோட்டில் பிரபல வெஜ் உணவகம் என்றால் அது ஸ்ரீ கிருஷ்ண பவன் தான். இது சூரம்பட்டி வலசு, பவானி மெயின் ரோட்டில் அமைந்திருக்கு.இந்த உணவகம் சுமார் 35 வருடம் பழமையானது. இங்கு தோசை வெரைட்டிகள், சோலா பூரி, பொங்கல், இடியாப்பம்,கிச்சிடி போன்ற அனைத்து டிபன் வெரைட்டிகள் கிடைக்கிறது.

ஈரோடு போறிங்களா? மண் மனம் மாறாத கொங்கு சமையல் சாப்பிட..இதை தெரிஞ்சிகோங்க! | Best Places To Eat In Erode

அதுமட்டும்மல்லாமல், மினி மீல்ஸ், முழு மீல்ஸ், வெரைட்டி ரைஸ், காளான் பிரியாணி ஆகிய உணவுகள் சிறந்த சுவையிலும் மலிவான விலையிலும் கிடைக்கிறது. இரவு வேளையிலும் டிபன் உணவுகள் மற்றும் வெஜ் சைனீஸ் உணவுகளாகிய நூடுல்ஸ், பிரைட் ரைஸ் போன்ற வகைகளும் கிடைக்கும்.குடும்பத்துடன் சென்று சாப்பிட இந்த உணவாகம் ஓர் சிறந்த இடமாகும்.

ஸ்னாக்ஸ் 

ஈரோடு அழகை பார்த்து ரசித்துவிட்டு பசியோடை இருப்பவர்களுக்கு சில சின்ன சின்ன ஸ்னாக்ஸ் கடைகளும் இங்கு ஏராளமாக இருக்கிறது. அப்படி நீங்கள் கண்டிபாக சாப்பிட்டு பார்க்க வேண்டிய இடங்கள் இதோ,

முதலியார் போண்டா கடை

இங்கு இவர்களது போண்டா ரொம்போ பேமஸ். பல வருடமா இந்த கடை இயங்கி வருகிறது. இவர்கள் ஈரோடு ஈஸ்வரன் கோயில் தெருவில் கடை அமைத்திருக்கின்றனர்.

ஈரோடு போறிங்களா? மண் மனம் மாறாத கொங்கு சமையல் சாப்பிட..இதை தெரிஞ்சிகோங்க! | Best Places To Eat In Erode

சுத்தமான தரமான முறையில் இவர்களிடம் உணவு கிடைப்பதால் மக்கள் பலரும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். நல்ல சுட சுட கடலை எண்ணையில் சமைத்த போண்டா, பஜ்ஜி,வடை,இனிப்பு போண்டா போன்ற வகைகள் கிடைக்கிறது.

தள்ளு வண்டி

அதுமட்டுமின்றி இங்கே பல விதமான தள்ளு வண்டி கடைகளும் இருக்கிறது.

ஈரோடு போறிங்களா? மண் மனம் மாறாத கொங்கு சமையல் சாப்பிட..இதை தெரிஞ்சிகோங்க! | Best Places To Eat In Erode

நல்ல சுட சுட காரசாரமான kfc ஸ்டைல் பிரைடு சிக்கன் சாப்பிட bsnl ஆபீஸ் அருகில் உள்ள ஈரோடு தள்ளு வண்டி கடையில் விற்கப்படுகிறது. அங்கு 100 ரூபாய்க்கே நல்ல ருசியா விதவிதமாக சாப்பிடலாம்.