பிரியாணி பிரியர்களே...திண்டுக்கல்லில் நாக்குக்கு ருசியா சாப்பிடணுமா? இதை பாருங்க!

Dindigul
By Swetha Sep 09, 2024 12:30 PM GMT
Report

ருசியான திண்டுக்கல் ஃபேமஸ் பிரியாணி எங்கு கிடைக்கும் என இந்த இந்த பதிவில் காணலாம்.

திண்டுக்கல் மாவட்டம்

இந்த மாவட்டம் புகழ்பெற்ற கடந்த காலத்தைக் கொண்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் மற்றும் பசுமையான அனுபவங்கள் நிறைந்தது இந்த மாவட்டம். திண்டுக்கல் ஒரு புகழ்பெற்ற ஆன்மிக சுற்றுலா தலமாகவும் உள்ளது. பழனி கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகும்.

பிரியாணி பிரியர்களே...திண்டுக்கல்லில் நாக்குக்கு ருசியா சாப்பிடணுமா? இதை பாருங்க! | Best Places To Eat In Dindigul

இவ்வாறு பல்வேறு சிறப்புகள் அடங்கிய இந்த மாவட்டத்தில் மற்றொரு புகழ்தான் இந்த திண்டுக்கல் பிரியாணி. உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தியான ருசி மற்றும் புகழ்பெற்ற ஒன்று. ஒரு இனிமையான சுவை மற்றும் மென்மையான இறைச்சி நிறைந்த, நிச்சயமாக ருசிக்க வேண்டிய ஒரு சுவையாக இருக்கிறது.

இதுபோல இன்னும் பல ருசியான உணவுகளை திண்டுக்கல்லில் எங்கெல்லம் சாப்பிடுவது என தெரிந்துகொள்ளலாம்.

மீனாட்சி பவன்

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைந்திருக்கும் இந்த் மீனாட்சி பவன் சைவ பிரியர்களின் சொர்கம் என கூறலாம். மிகவும் பிரபலமான மற்றும் பழமையான இந்த பவன் உயர்தர சைவ உணவகமாகும்.

பிரியாணி பிரியர்களே...திண்டுக்கல்லில் நாக்குக்கு ருசியா சாப்பிடணுமா? இதை பாருங்க! | Best Places To Eat In Dindigul

எனவே இட்லி, தோசை, சப்பாத்தி,பூரி, மசாலா தோசை, ஆப்பம்,இடியாப்பம், ரவா தோசை என அனைத்து விதமான உணவு வகைகளும் அங்கு கிடைக்கிறது. பெப்பர் ஃப்ரை இட்லி, குழி பணியாரம், பலரால் விரும்பி வாங்கி சாப்பிடப்படுகிறது.

இங்கு வெஜ் மீல்ஸ் வெறும் ரூ.80க்கு வழங்கப்படுகிறது. இந்த உணவகத்தில் இவர்களது உணவு வெரைடிகள் மட்டுமின்றி இனிப்பு வகைகளும் பிரபலமானது குறிப்பாக ரோஸ் மில்க், பாசுந்தி, காபி பயங்கர ருசியாக வழக்கப்படுகிறது.

வேணு பிரியாணி ஹோட்டல்

திண்டுக்கல் பேகம்பூரில் அமைந்துள்ள இந்த வேணு பிரியாணி ஹோட்டல் மிகவும் பிரபலமாக உள்ளது. இங்கு கிடைக்கும் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது.

பிரியாணி பிரியர்களே...திண்டுக்கல்லில் நாக்குக்கு ருசியா சாப்பிடணுமா? இதை பாருங்க! | Best Places To Eat In Dindigul

மேலும் இவர்களது கோலா உருண்டை, கரண்டி ஆம்லெட், சுக்கா, சாப்ஸ், கேபாப்ஸ், பிச்சி போட்ட கோழி ஆகியவை மிகவும் தரமான சுவையில் வழங்கப்படுகிறது. பெரும்பாலான அசைவ உணவுகளும் இங்கேயே கிடைக்கிறது. எனவே அசைவ பிரியர்கள் நிச்சயம் இந்த கடையில் சாப்பிட தவறிடாதீற்கள்.

திண்டுக்கல் தலப்பாகட்டி

திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் கிளைக்கள் அமைத்த மிகவும் பிரபலமான உணவகம்தான் திண்டுக்கல் தலப்பாகட்டி. இங்கு வழங்கப்படும் இவர்களது தலப்பாகட்டு சிக்கன் பிரியாணி,சிக்கன் 65, மட்டன் கீமா கறி, தலப்பாகட்டு மட்டன் பிரியாணி, முட்டை மசாலா, நான், பரோட்டா ஆகிய அனைத்தும் கிடைக்கும்.

பிரியாணி பிரியர்களே...திண்டுக்கல்லில் நாக்குக்கு ருசியா சாப்பிடணுமா? இதை பாருங்க! | Best Places To Eat In Dindigul

அசைவ உணவுகள் மட்டுமின்றி சைவ உணவுகளும் இங்கு விற்க்கப்படுகிறது. விலை சற்று உயர்வாக இருப்பினும் குடும்பத்துடன் சென்று சாப்பிட்டு மகிழ நிச்சயம் திண்டுக்கல் தலப்பாகட்டு உகந்த உணவகமாகும்.

சிவா பிரியாணி ஹோட்டல்

திண்டுக்கல் காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது இந்த சிவா பிரியாணி ஹோட்டல். இங்கு மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சுவரொட்டி, மட்டன் சுக்கா, மட்டன் மிளகு சாப்ஸ், போட்டி, தல கறி, மூளை, நாட்டு கோழி, கறி தோசை, மட்டன் ஊத்தாப்பம் போன்ற பல வகையான அசைவ உணவுகள் கிடைக்கிறது.

பிரியாணி பிரியர்களே...திண்டுக்கல்லில் நாக்குக்கு ருசியா சாப்பிடணுமா? இதை பாருங்க! | Best Places To Eat In Dindigul

விலை, சுவை, தரம் என அனைத்திலும் நல்ல உணவகமாக விளங்குகிறது. திண்டுக்கல்லில் கிடைக்கும் பல பிரபல பிரியாணிகளில் ஒன்றுதான் இந்த சிவா பிரியாணி. எனவே அங்கு செல்பவர்கள் கண்டிப்பா சாப்பிட வேண்டிய கடை இது.

தாதா காபி ஹவுஸ்

திண்டுக்கல், தேனி ஆனந்தம் சில்க்ஸ் அருகில் உள்ள இந்த தாதா காபி ஹவுஸ் மாலை நேர பசிக்கு ஒரு நல்ல இடமாகும். இங்கு இவர்களது ஃபேமஸ் என்றால் அது தாதா டீ தான். அதை தவிற இங்கு காபி, ஜிகர்தண்டா,ஃப்ரெஷ் ஜூஸ், மில்க் ஷேக், பஜ்ஜி,போண்டா,வடை போன்றவை கிடைகிறது.

பிரியாணி பிரியர்களே...திண்டுக்கல்லில் நாக்குக்கு ருசியா சாப்பிடணுமா? இதை பாருங்க! | Best Places To Eat In Dindigul

அதுமட்டுமின்றி டிபன் வகைகளான இட்லி,பல தோசை வகைகள், பொங்கல், சப்பாத்தி, பரோட்டா ஆகியவையும் மதிய வேளையில் லெமன் சாதம், தயிர் சாதம், காளான் பிரியாணி ஆகியவையும் கிடைகிறது.