தர்மபுரி போறிங்களா? சாப்பிட இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க
தர்மபுரியில் உள்ள பேமஸ் ஆன உணவு மற்றும் ஹோட்டல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தருமபுரி
சங்ககாலத்தில் தகடூர் என அழைக்கப்பட்ட தருமபுரி மாவட்டம் சுதந்திரத்திற்கு பின் தமிழ்நாட்டில் பிரிக்கப்பட்ட முதல் மாவட்டமாகும்.1965 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து பிரித்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
30% காடுகளால் சூழப்பட்ட தர்மபுரியானது மாம்பழ உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் தாய் நதியான காவேரி தருமபுரி மாவட்டம் வழியாகவே தமிழ்நாட்டில் நுழைகிறது. அந்த காவேரி நுழையும் பகுதியே ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியாகும்.
ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி குளியல், பரிசல் சவாரி, எண்ணெய் மசாஜ்காக தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஒகேனக்கலுக்கு மக்கள் படையெடுத்து வருகிறார்கள். தருமபுரி வரும் போது ருசியான உணவுகளை எங்கு கிடைக்கும் என பார்க்கலாம்.
ஒகேனக்கல் மீன்
ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் ஒரு குளியல் போட்டுவிட்டு, பரிசல் சவாரி முடித்து வரும் வழியிலே வரிசையாக உள்ள மீன் கடைகளில் இருந்து வரும் மீன் வாசனை ஆளை இழுக்கும். அந்த பகுதியிலே பிடித்து பொறித்து தரப்படும் விதவிதமான மீன்களை ஒரு பிடி பிடிக்கலாம். மீன்களின் வகையை பொறுத்து விலை மாறுபடும்.
தர்மபுரி நிப்பட்
தருமபுரியின் மற்றொரு பிரபல பலகாரம் தருமபுரி நிப்பட்.மற்ற ஊர்களில் தட்டை வடை, தட்டு வடை என்பது தான் தருமபுரி வட்டாரத்தில் 'நிப்பட்' என்றழைக்கப்படுகிறது. மற்றபகுதிகளில் தயாரிக்கப்படுவதை தர்மபுரியில் தயாரிக்கப்படும் நிப்பட்டிற்கு சுவை அதிகம்.
கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் தருமபுரி நிப்பட் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
o2 garden ரெஸ்டாரண்ட்
தர்மபுரியில் சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது o2 garden ரெஸ்டாரண்ட். மதியம் 12:00 மணிக்கு முதல் இரவு 10:30 மணி வரை இயங்கும். குழுவாக அமர்ந்து சாப்பிடும் வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், விசாலமான பார்க்கிங் வசதியுடன் அமைந்துள்ளது.
இந்த உணவகத்தில் சிக்கன், மட்டன், இறால் பிரியாணி தொடங்கி கிரில், தந்தூரி என அனைத்து வகையான அசைவ உணவுகளும் கிடைக்கும். சைவ உணவு பிரியர்களுக்கு பன்னீர், மஸ்ரூம் போன்ற உணவு வகைகளும் உண்டு. கூடுதலாக ஷவர்மா, சூப், ஐஸ் கிரீம் ஆகியவையும் கிடைக்கும்.
SK multicuisine family restaurant
தர்மபுரி - ஒகேனக்கல் சாலை அருகே எரிகோடியில் அமைந்துள்ளது SK multicuisine family restaurant. மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும். குளிரூட்டப்பட்ட இந்த உணவகத்தில் விசாலமான பார்க்கிங் வசதியும் உள்ளது. நார்மல் விலையிலே பிரியாணி, நூடுல்ஸ் போன்ற உணவு வகைகள் கிடைக்கின்றன. குடும்பத்துடன் சென்று சாப்பிட ஏற்ற உணவகமாகும்.
சாய் சங்கீத்
சேலம் - பெங்களூர் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே அமைந்துள்ளது சாய் சங்கீத் உணவகம். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் இந்த உணவகத்தில் விசாலமான பார்க்கிங் வசதியுடன் அமைந்துள்ளது. இங்கு ஜூஸ் வகைகள், சாண்ட்விச், ஸ்வீட்ஸ், சைவ உணவுகள், அசைவ உணவுகள் அனைத்தும் கிடைக்கும். ஆனால் தரத்திற்கேற்ப விலை சற்றே அதிகம்.
அதியன் புட்ஸ்
தருமபுரி பை பாஸ் சாலையில் அமைந்துள்ளது அதியன் புட்ஸ். காலை 7 மணி முதல் இரவு 10:30 மணி வரை இந்த உணவகம் இயங்கும். சைவ உணவகமான இங்கு 50 ரூபாய்க்கு கம்பு தோசை, திணை தோசை என 20 வகையான தோசைகள் கிடைக்கிறது. மேலும், பன்னீர் இட்லி, கோபி இட்லி, இட்லி 65 என விதவிதமான இட்லிகள் கிடைக்கிறது.
ஹோட்டல் சர்வேஷ் இன்
சேலம் பெங்களூர் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது ஹோட்டல் சர்வேஷ் இன். காலை 7 மணி முதல் 10 மணி வரை இயங்கும் இந்த ஹோட்டல் குளிரூட்டப்பட்ட சைவ உணவகம் ஆகும்.
இங்கு ரூ.60 க்கு தொடங்கி ரூ.130 வரை 20க்கும் மேற்பட்ட விதவிதமான தோசைகள் கிடைக்கிறது. இங்கு வாகனங்களை நிறுத்த விசாலமான பார்க்கிங் வசதியும் உள்ளது.