பிப்ரவரியில் இந்த இடத்தையெல்லாம் மிஸ் பண்ணிராதீங்க - முக்கியமான ஸ்பாட்!
பிப்ரவரி மாதம் தென் இந்தியாவில் டூர் போக சிறந்த இடங்களை பார்க்கலாம்.
மூணாறு, கேரளா
பிப்ரவரி மாத குளிர்ச்சியான மற்றும் இனிமையான வானிலையுடன், மூணாரின் ரம்மியமான தேயிலை தோட்டங்கள், பசுமையான காடுகள் மற்றும் அமைதியான ஏரிகளை அனுபவிக்கலாம். குறிப்பாக, இரவிகுளம் தேசிய பூங்கா, தேயிலை தோட்டம், மாட்டுப்பட்டி அணை, ஆனைமுடி சிகரம்.
கூர்க் (குடகு), கர்நாடகா
அபே நீர்வீழ்ச்சி, துபாரே யானைகள் முகாம், ராஜாவின் இருக்கை, காபி தோட்டங்கள், நாம்ட்ரோலிங் மடாலயம் போன்ற இடங்களை காணலாம்.
ஆலப்புழா, கேரளா
படகு சவாரி, வேம்பநாடு ஏரி, ஆலப்புழா கடற்கரை, கிருஷ்ணாபுரம் அரண்மனை போன்ற படகுப் பயணங்களை அனுபவிப்பதற்கும், உள்ளூர் கிராமங்களை சுற்றிப் பார்ப்பதற்கும், பிப்ரவரி மாதம் சரியானதாக உள்ளது.
ஊட்டி, தமிழ்நாடு
ஊட்டி ஏரி, தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம், ரோஸ் கார்டன் என பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளது. கண்டிப்பாக இங்கு நேரத்தை செலவிடலாம்.
பாண்டிச்சேரி
பிரெஞ்சு பாணி கட்டிடங்கள், கலகலப்பான தெருக்கள் மற்றும் சுத்தமான கடற்கரைகள் என ரம்மியமாக இருக்கும். ஆரோவில், ப்ரோமனேட் பீச், ஸ்ரீ அரவிந்தோ ஆசிரமம், பிரஞ்சு காலாண்டு போன்ற இடங்களை கண்டு களிக்கலாம்.