நான் இருந்திருந்தா கோலி இவ்வளவு ரன்கள் அடித்திருக்கமாட்டார் : பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளார்

pakistan viratkohli shoaibakthar
By Irumporai Apr 17, 2022 06:09 AM GMT
Report

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தான்,விராட் கோலிக்கு எதிராக விளையாடியிருந்தால், அவர் இவ்வளவு ரன்களை எடுத்திருக்க மாட்டார் என கூறியுள்ளார்.

உலகின் சிற்ந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர். சச்சின் , பாண்டிங் போன்ற மாபெரும் பேட்டிங் ஜாம்பவான்களுக்கு சவலாக இருந்தவர் இந்த நிலையில் இவர் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து பேசியுள்ள அக்தர் :

விராட் கோலி ஒரு நல்ல மனிதர் மற்றும் சிறந்த கிரிக்கெட் வீரர், ஆனால் நான் விராட் கோலிக்கு எதிராக விளையாடியிருந்தால், அவர் இவ்வளவு ரன்களை எடுத்திருக்க மாட்டார்.

ஆனால் அவர் எனக்கு எதிராக எத்தனை ரன்கள் எடுத்திருந்தாலும் அது அற்புதமானதாக இருக்கும், மேலும் அந்த ரன்களுக்காக அவர் கடுமையாக போராடியிருப்பார். அவரால் 50 சதங்கள் வரை அடித்திருக்க முடியாது.

நான் இருந்திருந்தா கோலி இவ்வளவு ரன்கள் அடித்திருக்கமாட்டார் : பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளார் | Best Out Of Virat Kohli Claims Shoaib Akhtar

அதிகபட்சம் 20 அல்லது 25 சதங்கள் அடித்து இருக்கலாம் ஆனால் அவை சிறந்த சதங்களாக இருந்திருக்கும். விராட் கோலின் சிறந்ததை நான் வெளிக்கொண்டு வந்திருப்பேன் என கூறியுள்ளார்.

2010 இல், தம்புல்லாவில், ஆசியக் கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் அக்தர் மற்றும் கோலி பங்கேற்று இருந்தனர். இருப்பினும், கோலி தொடக்கத்திலே ஆட்டமிழந்தார். இதனால் அவர் அக்தரை எதிர்கொள்ளவில்லை. அதன் பிறகு இருவரும் ஒரே போட்டியில் விளையாடியது இல்லை.