இந்தியாவின் அடுத்த பிரதமர் இவர் தான் - சரிவை சந்தித்த பிரதமர் மோடி
இந்தியாவின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க மோடியே தகுதியானவர் என்று இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
குறிப்பிட்ட மாதங்கள் இடைவெளியில் இந்தியா டுடே நிறுவனம் மூட் ஆப் தி நேஷன் சர்வேவை வெளியிடுவது வழக்கம். தேசிய அளவில் மத்திய ஆளும் கட்சிக்கும், பிரதமருக்கும் இருக்கும் மக்கள் ஆதரவு, மாநில முதல்வர்களின் செயல்பாடு என்று பல விஷயங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு இந்த சர்வே வெளியிடப்படும்.
அந்த வகையில் இன்று வெளியான இந்தியா டுடே மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியே தகுதியானவர் என்று 24% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் 66% மக்கள் மோடிக்கு ஆதரவு அளித்த நிலையில் இந்த முறை 38% ஆக சரிந்துள்ளது.
2வது இடத்தை 11% மக்கள் ஆதரவுடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், 3வது இடத்தை ராகுலும் (10%) பிடித்துள்ளனர். அதே சமயம் மோடிக்கு அடுத்து பாஜக கட்சிக்குள் சிறந்த பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விக்கு அமித் ஷாவிற்கு 23% ஆதரவுடன் 2 ஆம் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.