இது என்ன புது டிசைனா இருக்கு .. வளைத்து போடப்பட்ட ரோடு - வாயடைத்து போன கோவை மக்கள்
கோவையில் சாலையில் நின்ற வாகனத்தை அகற்றாமால் சாலையினை வளைத்து நெளித்து போட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கோவையில் சாலைபோடும் பணி
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் தற்போது புதிய புதியதாக சாலை போடும் பணிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இரவு நேரங்களில் துவங்கி அதிகாலை வரை மட்டுமே பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதில் கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி பகுதியில் தற்போது புதிய சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
வளைந்து நெளிந்த சாலை
அப்பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பழுதடைந்த மின் மயான வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை அப்புறப்படுத்தாமல் சாலையை வளைத்து நெளித்து போட்டுள்ளனர்.
இது என்ன புது டிசைனா இருக்கே என ஊரவாசிகள் வியக்க தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.