ஐபிஎல் தொடரில் விளையாட மறுக்கும் பிரபல வீரர்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என பிரபல வீரர்கள் இருவர் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக 2 அணிகள் இணைந்துள்ளதோடு, வீரர்களுக்காக நடக்கவுள்ள மெகா ஏலமும் இந்தாண்டு தொடரை பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக்கியுள்ளது.
இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை இங்கிலாந்து 4-0 என்ற கணக்கில் இழந்து படுதோல்வி கண்டதால் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். தனிப்பட்ட பேட்டிங்கில் நன்றாக விளையாடினாலும், கேப்டனாக அணியை நன்றாக வழி நடத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
தோல்விகளுக்குப் பின் பேட்டியளித்த அவர், இங்கிலாந்து அணி தற்போது இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது. இந்த தருணத்தில் ஒட்டுமொத்த அணி வீரர்களும் மோசமான மனநிலைக்கு செல்லாமல் மீண்டும் இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு வர தங்களது பங்களிப்பை கொடுக்க வேண்டும். நான்தான் அணியை வழிநடத்த சரியான வீரர் என நினைக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இனி வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் இங்கிலாந்து அணி மற்றும் அதன் வெற்றிக்கு மட்டுமே முழு கவனமும் இருக்கும் என கூறியிருந்தார்.
இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் டெஸ்ட் தொடரில் முழு கவனத்தையும் செலுத்துவதற்காக மற்றொரு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸூம் ஏலத்தில் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.