இஸ்ரேலுக்கு பயம்காட்டிய ஈரான் - லெபனான் டீம்; கைகள் நடுங்கும் நெதன்யாகு!
நெதன்யாகுவிற்கு கைகள் நடுங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈரான் பதிலடி
காசாவிற்கு எதிரான போரில், ஹமாஸிற்கு, ஈரான் மறைமுக ஆதரவு தெரிவிப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டிய வண்ணம் இருந்தது. அதன்படி, ரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குல் நடத்தியது.
இதில், ஈரானை சேர்ந்த 2 அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததால், ஈரான் கொந்தளித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், இஸ்ரேலை நோக்கி 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசியது.
கடந்த மே மாதம் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இது பல்வேறு சந்தேகங்கள் மற்றும் சர்ச்சைகளை எழுப்பியது. தொடர்ந்து, ஈரானின் புதிய அதிபராக மசூத் பெசஸ்கியான் பொறுப்பேற்ற நிலையில்,
வைரல் வீடியோ
அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர்கள் டெஹ்ரானில் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் ஃபுஆத் ஷுக்ர் கொல்லப்பட்டார்.
Pay close attention to Benjamin Netanyahu’s hands pic.twitter.com/zvnaq80GVN
— Matt Wallace (@MattWallace888) October 1, 2024
இதன்பின் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர்கள் வெடித்தது, வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தொடுத்தது. இந்நிலையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையின் தளபதி அபாஸ் நில்ஃபோராஷன் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா லெபனானில் கொல்லப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஈரான் உடனடியாக நேரடி தாக்குதலை முன்னெடுத்து இருப்பதாக கருதப்படுகிறது. தற்போது ஈரான் , லெபனான் உள்ளே தாக்குதல் நடத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில் அவரது கைகள் நடுங்கியது. அவருக்கு உடல் ரீதியாக பாதிப்பு எதுவும் இருக்கிறதா அல்லது மன ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.