திருநங்கைகளிடம் வாக்கு சேகரித்த அதிமுக அமைச்சர் பெஞ்சமின்
சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அமைச்சர் பென்ஜமினுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இதையடுத்து மதுரவாயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பெண்கள் ஏராளமானோர் ஆரத்தி எடுத்தும் தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்து வரவேற்றனர். மேலும் ஒரு பகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் திருநங்கைகளுக்கு கை கொடுத்தார். பின்னர் திருநங்கைகள் ஆசீர்வதித்து கொடுத்த பணத்தை வாங்கி தனது சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா போல் உடை அணிந்த பெண் அமைச்சர் பென்ஜமினுக்கு வாக்கு சேகரித்தார்,
இறந்த முதல்வர் ஜெயலலிதாவே அமைச்சர் பெஞ்சமினுக்கு வாக்கு சேகரிப்பது போல் அந்தப் பெண் பச்சை நிற உடை அணிந்து அமைச்சர் பெஞ்சமினுக்கு வாக்கு சேகரித்தார். அந்த பெண்ணுக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.