பிரமிக்க வைக்கும் மாதுளையின் நன்மைகள் - இனிமேல் வேண்டாம்ன்னு சொல்லாதீங்க

benifitsofpomegranate மாதுளையின் நன்மைகள்
By Petchi Avudaiappan Jan 23, 2022 11:03 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

பழங்களிலேயே பழமையானதும், அயல்நாடுகளில் சைனீஸ் ஆப்பிள் என்றழைக்கப்படும் மாதுளம் பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளது. உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால் இழந்த ஊட்டச்சத்தை திரும்ப பெறலாம். இந்த பழத்தில் உள்ள நன்மைகளை இக்கட்டுரையில் காண்போம். 

  • உடலில் நைட்ரிக் ஆக்சைட்  என்னும் தனிமம் குறையும்போது மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மைகொண்டதால் இதைச் சாப்பிட்டால் மனஅழுத்தம் குறையும்.
  • உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி உற்சாகமாக உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். 
  • நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்ட மாதுளையின் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை தடவுவதாலும் காயம் விரைவில் குணமாகி தழும்புகள் மறையும். 
  • மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டக்கூடியது.
  • ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும் மாதுளை அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும். 
  • கர்ப்பிணிப் பெண்கள் தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும்.
  • மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. இது செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரிகிறது.