காதலிகளை மாற்றி நண்பர்கள் உல்லாசம் - இறுதியில் நடந்த டிவிஸ்ட்
காதலிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்க முயன்றதாக இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதலியுடன் உல்லாசம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர்கள் ஹாரிஸ்(30) மற்றும் ஹேமந்த்(30). பொறியியல் பட்டதாரியான இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் காதலி உள்ள நிலையில் பலமுறை காதலியுடன் உல்லாசமாக இருந்து அதை அவர்களுக்கு தெரியாமல் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
மிரட்டல்
இந்நிலையில் இருவரும் தங்களது காதலிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்க முடிவு செய்து இது குறித்து தங்களது காதலிகளிடம் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த இருவரும், பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரில், "ஹாரிஸ் என்னை அவரது நண்பர் ஹேமந்துடன் படுக்கையை பகிருமாறு நிர்பந்திக்கிறார். இதற்கு கைமாறாக அவர் அவரது காதலியை இவருடன் உல்லாசமாக இருக்க அனுப்பி வைப்பாராம்.
இதற்கு மறுப்பு தெரிவித்ததால் இதற்கு முன்னர் நங்கள் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் குழு
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஹாரிஸ்(30) மற்றும் ஹேமந்த்தை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
ஹாரிஸ் மற்றும் ஹேமந்தின் செல்போனை ஆய்வு செய்ததில், இவர்கள் காதலிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் வாட்ஸ்அப் குழுக்களில் இருந்துள்ளனர். முன்னதாக இது போன்ற பல்வேறு பெண்களை ஏமாற்றி மாறிமாறி உல்லாசம் அனுபவித்துள்ளனர். அந்த பெண்கள் யாரும் இதுவரை புகார் அளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணையை துவங்கியுள்ளனர்.